Share this book with your friends

SINTHANAI SIRAGUGAL- PART 01 / சிந்தனை சிறகுகள் -பாகம் 01 பயண அனுபவங்கள்

Author Name: Nellai Jessy Manalan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சிந்தனை சிறகுகள்  துவங்கும் போது இவ்வளவு சீரியஸாக தொடர்ந்து எழுதுவேன் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. அதுவும் அதனைப் புத்தக வடிவில் வரும் அளவுக்கு எழுதுவேன் என்று நினைத்ததே இல்லை. எல்லாம் இறையருள். ஐந்து வருடங்களுக்கு முன், நண்பர் டாக்டர். பேதுரு தேவதாசன் அவர்கள் மூலம் 'உன்னதச்சிறகுகள்' குழுவில் இணைய அழைப்பு வந்த போது, இதனை நிறுவிய நிர்வாகி, நண்பர், ஊடகவியலாளர், உலகளாவிய தொழில் முனைவோர்களின் ஊக்குநர், சகோ. Jebakumar, "நாம் எல்லோரும் எழுத வேண்டும், இன்றைய, டிஜிட்டல் தலைமுறை கிறிஸ்தவர்களுக்கு,  சரியான முறையில், சரியான விடயங்களைக் கொடுக்காவிட்டால், அவர்களைக் கொத்திக் கொண்டு போக இந்த இணைய உலகம், கழுகு போல தயாராக இருக்கிறது" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அதனை மற்றவர்கள் எப்படி எடுத்தார்களோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் இதற்கென்று, எழுத, மெனக்கெட வேண்டுமென்று தீர்மானம் செய்தேன். அதற்கு ஏற்ப என் பணி வாழ்க்கையிலும், எழுதுவதற்கு ஏற்ற சூழல் மற்றும் பயணங்களும் அமைந்தது இறைவனின் ஆசியே. இவ்விதம் எனது எழுதுகோல் இயங்கக் காரணமான ஜெபக்குமார் அண்ணன், எம் குடும்ப நண்பர், மருத்துவர். பேதுரு தேவதாசன் மற்றும் உன்னத சிறகுகள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். 

850-க்கும் மேலான இந்தத் தொடர் பதிவுகளை, உன்னத சிறகுகள், பிறந்தது ஒளிர்வதற்காக, Born to Shine, கிறிஸ்க்ராஸ், நம்மைச்சுற்றி,  நெகேமியா ஃபிரெண்ஸ், தென்னிந்திய திருச்சபை உறுப்பினர்கள், Renaissance Scripture Study Forum உள்ளிட்ட புலனங்கள் மற்றும் முகநூல் குழுக்களில் பதிவு செய்யவும், அதற்கு கிடைத்து வரும் ஆதரவுகளுக்கும், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றி சொல்லி மகிழ்கிறேன். 

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நெல்லை ஜெஸி மணாளன்

இந்தியா முழுவதும், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மிகவும் பின்தங்கிய, நலிவடைந்த மற்றும் விளிம்பு நிலை மக்களின், கல்வி, பொருளாதார, மனித வள மேம்பாட்டிற்காக, சமுதாயங்களின் வளம் குன்றா வளர்ச்சிக்காக, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் சேவைகள் செய்து வரும் தொழில் முறை சமூக சேவகர். 

தான் படித்த சுரண்டையின் அருட்பணியாளர் பேரன் புரூக் துவங்கிய மேல்நிலைப் பள்ளியின் இலட்சிய வாசகமான எழும்பு & ஒளி வீசு (Arise & Shine)  என்பதனை உள்வாங்கி அதனை நடைமுறை வாழ்க்கையில், சமூகப் பணியில், மாணவர்கள், சாமான்ய மனிதர்கள் மத்தியில் நல்  மதிப்புகள், தகவுகளை விதைக்க எத்தனிக்கும் சமூக ஆர்வலர். மனிதர்களை, உற்று நோக்குபவர். சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளர். எழுத்தாளர். ஆசிரியர், tamilbiblesearch.com, பேசும் புத்தகங்கள், மிஷனரி வரலாறு  காணொளி நேரலை நிகழ்வு நெறியாளர். 

சுரண்டை மாணவர் அறிவியல் பூங்காவின், ஆலோசனைக் குழு உறுப்பினர். முதல் தலைமுறை பட்டதாரி. சமீபத்தில் ஆயராகவும் அருட்பொழிவு பெற்றவர். இறையியல் முனைவர் பட்ட, ஆய்வு செய்து கொண்டிருப்பவர். மனைவி மி. ஜெஸி பிளாரன்ஸ், ஆங்கில மொழி பயிற்றுநர் மற்றும் தொழில் முனைவோர். வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வரலாற்று ஆர்வலர். நடைமுறை வாழ்க்கையில், ஒரு வழிப்போக்கனாக, தான் பார்த்த  சம்பவங்கள், மனிதர்கள், அதன் மூலம் பெறப்பட்ட வாழ்வியல் அனுபவங்களை, சாட்சிகளை, கடவுள் அரசின் தகவுகளோடு பொருத்திப் பார்த்து சிந்திக்க அழைக்கிறார் இந்த சிந்தனை சிறகுகள் மூலமாக. இவைகள் வாசிப்பவர்களை ஒரு புதிய சிந்தனை அனுபவத்துக்குள்ளாக  இட்டுச் செல்லும்.

Read More...

Achievements

+7 more
View All