Share this book with your friends

Suffering / தவிப்பு Thavippu

Author Name: Selvakumar Annadurai | Format: Paperback | Genre : Poetry | Other Details

அன்பு தோழமைகளே 

இந்த தவிப்பு புத்தகம் என்பது ஏக்கங்களின் வெளிப்பாடும் 

நினைத்து தவித்து ஏங்கி

எங்கும் நிறைந்திருக்கும் 

உண்மையான உள்ளங்களின் 

உண்மையான நிலைப்பாடு 

ஆசைப்பட்ட வாழ்க்கை வாழத்தான் 

அனைவருக்கும் ஆசை ஆனால் 

அடைந்த வாழ்க்கை என்பது கூட்டில் 

அடைப்பட்ட குருவிகள் போலாகின்றது 

அன்பால் இணைந்து தவித்துப் பாருங்கள் 

எந்தன் தாகமும் உங்கள் உள்ளமும் ஒன்றுதான் 

என்றாகிவிடும் 

அன்பாய் அழைக்கின்றேன் 

வந்து அனுபவித்துப் பாருங்கள் 

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செல்வக்குமார் அண்ணாதுரை

அனைவருக்கும் அன்பின் வணக்கம், என் வீட்டில் நான் மூன்றாவதாக பிறந்தேன், கடைசி பிள்ளை என்றாலே குறும்பிற்கு அளவுகளே  இல்லை, என்னுடைய நட்பு வட்டாரங்கள் என்றும் என்னை விட்டதும் இல்லை நானும் அவர்களை விட்டதும் இல்லை, எந்நாளும் எங்களுக்குள் சண்டையில்லாத நாட்களே இல்லை, அந்த வசந்தகாலம் இன்றும் நினைத்தால் இனிக்கின்ற தருணங்களே, கல்லூரி நாட்களும் செய்த பிழைகளும், கல்லூரிக்கு கட்டணம் கட்டமுடியாத கண்ணீர் கதைகளும், பசியில் துடித்த போது பஸ் ஸ்டாண்ட் பாய்  அண்ணா கடை  பஜ்ஜியும் டீயும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்., கனவுகள்  ஆயிரம் இருந்தாலும் கடைசியில் நானும் ஓர் ஆசிரியரானேன், இந்த அனுபவம் என்னை மட்டுமல்ல என்னை விட மிகப்பெரிய ஆசை கனவுகள் கொண்ட சமூகத்தை வழிநடத்த கிடைத்த பாக்கியம் தான் இது, அந்த வேளையிலும் என்னுடைய முதல் லட்சியத்தை செய்தேன் "என் கனவுகளின் விதை கவிதை" என்ற மூன்று புத்தகங்களை வெளியீடு செய்தேன் அதன்  தொடர்ச்சியாக இந்த புத்தகமும் எழுதுகிறேன்..,

வாழ்வில் இனிமை என்பது நம்முடைய கஷ்டத்திலேதான் பிறக்கின்றன என்பதை   நான் மனமார புரிந்து இந்த “தவிப்பு” என்ற புதியதொரு படைப்பை உங்களிடம் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Read More...

Achievements