Share this book with your friends

Thirukural Kathaigal / திருக்குறள் கதைகள் திருக்குறள் நெறி நின்ற சான்றோர்கள் (தொகுதி 2)

Author Name: S.kalaivanan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்நூலில் திருக்குறளும், அதில் வள்ளுவர் காட்டும் சான்றாண்மை
குணங்களும், அதற்கான விளக்கமும் தகுந்த உண்மை சம்பவங்கள் கொண்ட
கதைகள் மூலம் சுவாரஸ்யமாக கொடுக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் முல்லைக்கு ஏன் தேர் கொடுத்தார் பாரி அதன் மெய்ப்பொருள்
என்ன என்பது போன்ற விளக்கங்களும், அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின்
மருத்துவ சாதனையில் உள்ள அறம் மற்றும் மாவீரன் அலெக்சாண்டர்,
மார்ட்டின் லூதர் கிங், திப்பு சுல்தான், பகத்சிங், பெர்னாட்ஷா, அறிஞர் அண்ணா
போன்றோர் பின்பற்றிய அறவழி அனைத்தும் திருக்குறள் வாயிலாக இனிய
கதைகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளுக்கும் போர்
நடந்துகொண்டிருக்கிறது. போருக்கான வெளிப்படையான காரணங்கள்
எதுவாகிலும் அடிப்படை காரணம் இரண்டு தேசத் தலைவர்களின் மனம்
செம்மையுறாததே ஆகும். பச்சிளம் குழந்தைகளும், பால் மனம் மாறாத
பாலகர்களும், இளைஞர்களும், தாய்மார்களும் போரில் கொன்று குவிக்கப்
படுகிறார்கள். இந்நிலை மாறி மனிதர்களின் மனம் செம்மையுற
வேண்டுமெனில் உலகம் வள்ளுவர் காட்டும் அறவழியில் செல்ல வேண்டும்.
அதற்கான நல்வழியை அறிய இந்த நூல் ஒரு கையேடாக அமையும் என்பதில்
மகிழ்ச்சி.

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எஸ்.கலைவாணன்

ஆசிரியர் S. கலைவாணன் அவர்கள் கடலூர் மாவட்டம்

 நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர்.கல்லூரிப் படிப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் சிறப்பாக முடித்து மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி கனநீர்  தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து முப்பத்தியாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஈர்ப்பால் 1330 குறள்களையும் மிகத் தெளிவாகப்படித்து 'வள்ளுவத்தின்' உயரிய மாண்பினை அறிந்துகொண்டவர். தான் கற்றறிந்த கருத்துக்களைத்  'திருக்குறள் நெறி நின்ற  சான்றோர்கள் 'என்ற புத்தகத்தை எழுதி சென்ற ஆண்டு புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு திரு ரங்கசாமி அவர்கள் மூலம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது தொகுதியாக இந்த நூலை படைத்திருக்கிறார்.

அனைவரும் வள்ளுவத்தின் நெறிமுறைகளைக் கற்று  வாழ்வில் பயனடைய வேண்டும் என்ற சிந்தனை இயற்கையிலேயே அவரிடம் இருந்த காரணத்தினால் தனக்கே உரிய பாணியில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் திருக்குறளைச் சான்றோர்களின் வாழ்வில் நடந்த சுவாரசியமான உண்மை நிகழ்ச்சிகளைச் 

சிற்சில  சான்றுகளைக்கொண்டு 

எளிய முறையில் விவரித்திருக்கிறார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து அதில் கூறப்பட்டுள்ள நீதிநெறிகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து மிகச் சிறப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பேரவாவால் இந்த நூலைப் படைத்துள்ளார்.

ஆசிரியர் நமது அன்னை பூமி, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் மாசுபட்டு  விடக்கூடாது என்ற ஆதங்கத்தினாலும், நமது இயற்கைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் வேட்கையினாலும் " A Focus on Environment through Thirukkural " என்ற புத்தகத்தை  எழுதிச் சென்ற ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் திரு. சந்தீப் நந்தூரி மூலம் வெளியிட்டார் என்பது கூடுதல் சிறப்பு.

Read More...

Achievements

+11 more
View All