Share this book with your friends

Thooya Annai Sarada Devi Tiruvilaidarpuranam / தூய அன்னை சாரதாதேவி திருவிளையாடற் புராணம்

Author Name: Sai Adimai | Format: Paperback | Genre : Poetry | Other Details

தூய அன்னை சாரதாமணி சென்ற நூற்றாண்டில்அவதரித்த மாபெரும் தவச்சீலர். பரப்பிரம்மமும், தவச்சீலரும்,  யோகேசுவரனும், ஞானியும், அவதாரபுருடருமான ஸ்ரீ இராமகிருட்டிண பரமஹம்ஸருக்குப் பத்தினியாகி அவருடைய சாதனைகளுக்குப் பக்கபலமாக இருந்து அனேகவிதத்தும் உதவி புரிந்து வாழ்ந்திருந்தவர். பதியின் கட்டளையைப் பின்பற்றி அவர் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்ய முயன்றவர். அநேக மக்களுக்கு மந்திரோபதேசம் செய்துவைத்து அவர்களுடைய வாழ்வின் இலட்சியங்களை எய்த அடிகோலியவர். வறியவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும், பெண்களுக்கும் ஆதரவாக இருந்து அவர்களுடைய அநேக இன்னல்களைத் தீர்த்தவர். 

இராமகிருஷ்ண மடத்தாருக்கு வழிகாட்டியாக இருந்து அளப்பரிய தொண்டு செய்தவர். சுவாமி விவேகானந்தர் விட்டுச் சென்ற பணிகளை மடத்தார் நிறைவு செய்ய தேவையான வழிகாட்டியாக இருந்தவர். சுற்றத்தினர் அநேக தொல்லை கொடுத்தபோதும் பொறுமை இழக்காது, பண்பும் தருமமும் கடைப்பிடித்தது, அவர்களுக்கு பணயுதவி புரிந்தவர். தேவையானபோது அற்புதங்கள் புரிந்து நின்றவர். கொலை கொள்ளை செய்யுங்கள்வருக்குங் கூட அனுகிரகம் செய்து அவர்களின் மனதையும், வாழ்க்கை முறையையும் மாற்றியமைத்தவர். வெள்ளைக்காரப் பெண்களுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களின் ஆத்துமனுபவத்தில் முன்னேற உதவி புரிந்தவர். எவரையும் இகழ்ந்து பேசாதவர். 

அடியவர்களின், பாபங்களையும், அவர்களின் முந்தைய பிறவித் தீவினைகளையும் தாம் வாங்கிக்கொண்டு அநேக உடலுபாதைக்கு ஆளானவர். எவருடைய குற்றங்களையும் பாராதிருந்து, அவர்களை மன்னித்து,  எல்லோருக்கும் நல்லதை மட்டுமே செய்தவர். இறுதி மூச்சுவரை சேவை, பணிவு, பண்பு, அடக்கம், பொறுமை,  மந்திரோபதேசம் போதித்து அதன்படியே வாழ்ந்து காட்டி நின்றவர். 

ஆதரிச, இலட்சியமகளாய், சகோதரியாய், பத்தினியாய், குருவாய் மற்றும்  தாயாய் அறுபத்தாறாண்டுகள் வாழ்ந்து அனேக தொண்டாற்றியவர். பாரதநாடு செய்த புண்ணியத்தால் இப்பேற்பட்ட மகான் அவதரித்திருக்கிறார்

தூய அன்னை சாரதாதேவிவாழ்க! இராமகிருட்டிணர்வாழ்க! சுவாமி விவேகானந்தர் வாழ்க! 

Read More...
Paperback
Paperback 1125

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சாயி அடிமை

தமிழ்நாட்டின் நாகரீகம் அறியாத சிறு கிராமமொன்றில் இளம் பருவத்தைக் கழித்து, பட்டமேற்படிப்பு படித்தும் வேலையின்றி இரண்டாண்டுகள் தவித்துப் பெற்றோருக்குச் சுமையாக இருந்து, பிறந்ததற்கு மிகவும் வருந்தி, நிர்க்கதியாய் இருந்த காலத்தில் காஞ்சி மகாசுவாமிகளின் ஆசியால் வேலை கிடைக்க, பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் ஆற்ற வேண்டிய கடன்களை முடிந்தவரை செய்ய, மகான்கள் மற்றும் இறையருளேகாரணமாகும். அரசு சார்ந்த துறையில் இருந்து ஓய்வு பெற்றபின்பு மனிதருள் தெய்வமாக வாழ்ந்து பலவாறான அற்புதங்கள் ஆற்றி அடியவர்க்கு அநேக விதத்தில் உதவி புரிந்து சமாதியேற்ற உத்தம புருடர்களின் வரலாற்றைப் பாடலாக எழுத உத்வேகம் பெற்றதின் விளைவுதான் இந்தப் புத்தகம். இதை நம்பிக்கையுடன் படிக்கும் அடியார் அனைவருக்கும் சாரதாமணி தேவி  பதினாறுவகைச் செல்வங்களையும் அருளுமாறு நூலாசிரியர்  மனப்பூர்வமாக  வேண்டுகிறார்.

புத்தக விற்பனையால் கிடைக்கும் இராயல்டி முழுதுமாக சாரதா ஆஸ்ரமம், உளுந்தூர்பேட்டை மடத்திற்கு நேரடியாகச்  செலுத்தப்படுகிறது.

தமிழ்கூறும் நல்லுலகு இப்புத்தகத்தையும், ஆசிரியரையும்  ஆதரித்தால்  இதுபோன்ற பலநூற்கள் எழுதிப் பிரசுரிக்க ஏதுவாகும்.

Read More...

Achievements

+9 more
View All