Share this book with your friends

VELLAI NIRATHTHIL ORU VANAVIL- THAVARUKKUM THAVARANA THAVARU ( 2 NOVELS COMBO) / வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - தவறுக்கும் தவறான‌ தவறு இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகை. 

1.வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - ஒரு திறமையான இளம் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தன் மனைவி லதிகாவுடன் சென்னையில் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்போது நண்பனின் குடும்ப பிரச்சினை உருவில் ஒரு சிக்கல் வருகிறது. அதற்கு தீர்வை கண்டறிய பெங்களூர்க்கு தனியாக செல்கிறான்.அங்கே பலவித ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவற்றை எப்படி எதிர்க்கொண்டான்... எப்படி சமாளித்து மீண்டான்? நண்பனின் பிரச்சினை தீர்ந்ததா? கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ள பக்கங்களை புரட்டுங்கள்...பரபரப்பான ஆனால் நெகிழ வைக்கும் குடும்பக் கதை... காத்திருக்கிறது. 

2.தவறுக்கும் தவறான தவறு - இந்த கதை...இரண்டு பாதைகளில் பயணித்து ஒன்றாக இணையும். ஒன்று... அமெரிக்காவிற்கு சென்று எய்ட்ஸ் நோய் பற்றியும் அதை எதிர்க்கும் மருந்தின் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு வருகிறார், டாக்டர் சற்குணம். அவர் இந்திய‌ மண்ணில் கால் பதிக்கும் விநாடியிலிருந்து அவர்க்கு நேரும் விபரீதங்கள் அவர் கனவிலும் நினைக்காதவை. அவற்றிலிருந்து வெளியறே அவருக்கு வெளிச்சகீற்று கிடைத்ததா? இரண்டு...கொடூரமாக நடக்கும் தொடர் கொலைகளின் காரணத்தை அறியவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வழக்கை கிடைக்கும் துப்புகளைக் கொண்டு சமயோசிதமாக நகர்த்துகிறார்கள். க்ரைம் த்ரில்லர்களில்.... இது ஒரு சரிக்கும் சரியான சரி!

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All