ஜான்சி ராணி உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர்.
அவர் மறைந்தாலும் இந்திய வரலாற்றில் வீரம் மிக்கப் பெண்ணாக இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார் ஜான்சி ராணி! புரட்சித்தலைவர்களில் இவர் மிக ஆபத்தானவர் என்று ஆங்கிலேய படைத்தளபதி ஹக் ரோஸ் குறிப்பிட்டுள்ளதில் இருந்தே இவரது திறமையை அறிய முடியும். ஆங்கிலேயர்களை எதிர்க்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெண்கள் படை ஒன்றை உருவாக்கியபோது அதற்கு ஜான்சி ராணி படை என்று பெயரிட்டதில் இருந்தும் சுதந்திரப் போரில் இவரின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். இவரது வீரத்தை போற்றும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் மையமாக விளங்கிய ஜான்ஸி கோட்டை, விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய பங்கை வகுத்துள்ளது.
ஜான்சி ராணி இறந்த தேதி மற்றும் ஆண்டு – ஜூன் 18, 1858