கசப்பு தந்த இனிப்பு என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு அறம் சார்ந்த கருத்துக்களை ஆழமாக பதிய வைக்கும் நோக்கத்துடன் கதைகள் புனையப்பட்டு உண்மை கதைகளை இணைத்து சில உண்மை சம்பவங்களை கூட பிணைத்து எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதைகள் மொத்தமும் நான்கு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது. பயணம் போகும் பொழுது நம் திட்டமிடுதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது. குழுவாக இணைந்து நாம் ஒரு காரியத்தை குறித்தோ அல்லது ஒரு லட்சியத்தை குறித்தோ பயணிக்கும் பொழுது நாம் நம் லட்சிய பயணத்தில் எப்படி அடிபிறழாமல் செயலாற்ற வேண்டும் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்த சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு உங்களுடைய மேலான ஆதரவை தந்து படித்து பயனுற வேண்டிக்கொள்கிறேன்.