ஒருங்கிணைந்த திருநெல்வேலி திருச்சபை உருவாகி சுமார் இரண்டரை நூற்றாண்டுகளாகின்றன. பராபரனின் பெரிதான கிருபையினால் இன்று திருமண்டலங்களாகவும், பல நூறு திருச்சபைகளாகவும் பெருகிவந்து கொண்டு இருக்கின்றது. பராபரனுக்கு ஸ்தோத்திரம். திருச்சபை சரித்திரத்தை அறிய வேண்டிய அவாவும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் ‘யார் நமது காரியமாய் போவான்,’ இதோ அடியேன் இருந்கின்றேன், என்னை அனுப்பும்” என்று ஏசாயா தீர்க்கன் முன் வந்தது போல திருநெல்வேலி வரலாற்றை மீள் பதிப்பு செய்யவும், வரலாற்று பணிகளை கள ஆய்வுப் மேற்கொள்ளவும், நின்றுபோன வரலாற்று “தொடரோட்டத்தை தொடரவும்” கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட இயக்கமே ‘திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்’
திருநெல்வேலி சரித்திரத்தை தொடர வேண்டுமால், சரித்திரத்தை எழுதுவதற்குரிய அறிவும், ஆற்றலும், அனுபவமும் உடையவர். சரித்திரத்தை கற்பதிலும், கற்ப்பிப்பதிலும் திருநெல்வேலி சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ.கிறிஸ்துதாஸ் அவர்களின் பணி பிரதானமானது. அவர் தனது 78 வது வயதில் 1990 ஆம் ஆண்டு மரித்துவிட்ட போதிலும், அவருடைய படைப்புகளை குடும்பத்தில் உறுப்பினர்கள் பாதுகாத்து வந்ததும், ஐயருடைய படைப்புகளை தக்க தருணத்தில் வரலாற்றுச் சங்கத்திற்கு அனைத்து நூல்களையும் மறுபதிப்புக்கு அனுமதியளித்தும் ஐயருடைய மறந்து கிடந்த கையெழுத்துப் பிரதிகளை வெளிக்கொண்டு வரவும், மொழிபெயர்ப்பு பணிகளுக்கும் பராபரன் உதவிசெய்தார்.
மறைந்து கிடந்த சரித்திரங்களை கண்டெடுத்து சிறந்ததொரு ஆபரணமாக கொடுத்திருக்கின்றார் பேராசிரியர் அவருடைய படைப்புகளில் இது மிகச்சிறந்த நநூலாக இருக்கும் என்பது நம்பிக்கை.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners