உலகெங்கும் தொழில் முனைவோருக்கான மதிப்பும் அங்கீகாரமும் பெருகி வரும் காலம் இது. தொழில் முனைப்பிற்கான வாய்ப்புகளும், அதற்குண்டான சாத்தியங்களும் பெருகி வருகிறது. புதிதாக சிந்திக்கின்ற ஆற்றலும், அந்த சிந்தனையை ஒரு தொழிலாக மாற்றவும் தெரிந்திருந்தால் போதும், அதற்குண்டான முதலீட்டை கொண்டுவந்து கொட்டுவதற்கு ஏராளமான முதலீட்டாளர்கள் தயாராக இருக்கிறார்கள். வாய்ப்புகளும், வசதிகளும் நிறைந்திருக்கும் அதே நேரத்தில், எண்ணிலடங்கா சவால்களும் நிறைந்தே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தொழில் முனைப்பில் வெற்றி பெறுவது எப்படி, அதற்கு தேவையான அறிவு, ஆற்றல், திறன்கள், வழிமுறைகள் போன்ற அனைத்தையும் ஓரிடத்தில் நெறிப்படுத்தி உங்கள் கைகளில் தரும் நோக்கமே இந்த புத்தகம்
"தொழில் முனைப்பில் வெற்றி"
சிவக்குமார் பழனியப்பன், இந்தியாவின் பெரும் நிறுவன பயிற்சியாளர்களில் முதன்மையானவர். உலகின் முன்னனி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தலைமைப் பதவிகளில் பணியாற்றும் மேலாளர்களுக்கான சிறப்பு பயிற்சியாளர். தலைமை பண்புகள், தொழில் வளர்ச்சி, சுயமுன்னேற்றம், போன்ற துறைகளில் வல்லுநர். தொழில் முனைவோர் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து, அவர்களது தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர். தொழில் முனைவோருடனும், பெரும் நிறுவனங்களுடனும் தொடர்ந்து பயணிக்கிறார். பயிற்சியாளர், பேராசிரியர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார்.