வணக்கம் அன்பு உறவுகளே நான் எழுத்தாளர் டாக்டர் இமாலயன் சென்னை தமிழ்நாட்டில் இருந்து. அடிப்படையில் நான் ஒரு பள்ளி மாணவர்களுக்கான ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் வரலாறு சமூகவியல் உளவியல் புவியியல் போன்ற பாடங்களை எடுக்கும் திறன் பெற்றவன். இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் வணிகவியல் சார்ந்த அனைத்து பாடங்கள் பொருளியல் மற்றும் மேலாண்மை சார்ந்த அனைத்து பாடங்களையும் என் கடந்த காலங்களில் எடுத்தும் நிகழ்காலத்தில் என் ஆசிரியர் பணியை மேற்கொண்டும் வருகிறேன். நான் என்னுடைய மேல்நிலைப் படிப்பை தூய துவமா மேல்நிலைப் பள்ளியில் முடித்து, என்னுடைய இளங்கலை பொருளியல் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் நிறைவு செய்தேன். முதுகலை பொருளியல் படிப்பை சிக்கிம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியின் வாயிலாக படித்து முடித்தேன். தமிழ் இலக்கியவியல் படிப்பில் இளங்கலை புலவியல் படிப்பை முதல் தேர்ச்சியில் வெற்றிகரமாக முடித்தேன், இதனை கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தேன். பொருளியல் படிப்பில் தத்துவ பேரறிஞர்கான எம்ஃபில் பட்டத்தையும் பெற்றது உள்ளேன். முனைவர் பட்டத்திற்கான பிஹெச்டி ஆய்வை பொருளியல் பாடத்தில் நமது இந்திய தேசத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் எந்த ஊரில் அமைந்துள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறேன்