"நாம் ஒவ்வொருவரும் சிறகுகளுடன் பிறந்திருக்கிறோம், தவழாதீர்கள்! சிறகை விரித்து மேலே பறக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" - ஐயா அப்துல் கலாம்.
கதைக்கரு:
வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த மூன்று எஞ்ஜினியர்கள், கொடைக்கானலில் ஒன்றாக கூடி யாரும் எடுக்கக்கூடாத முடிவை எடுத்தார்கள். விதி, அவர்கள் எடுத்த முடிவை நிறைவேற்ற விடாமல் தடுத்தது. விரக்தியில் வாழ்க்கையின் விளிம்பிற்கு சென்றவர்கள், சந்தித்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து எப்படி சாதனையாளர்களாக மீண்டார்கள் என்பதே கதை. அந்த மூவரின் அனுபவம் வெறும் கதையல்ல இளைய சமுதாயத்தினருக்கு ஒரு பாடம்.