ஒருவர் முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக்கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல்………………………………………………………………………………………………………………….. இருக்கும் நிலைஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.
தானம்
மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். கல்லீரல், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல் போன்ற உறுப்புகளையும், கண்கள், இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவற்றின் திசுக்களையும் தானம் செய்யலாம்.
மூளையின் கீழ்ப்பகுதி முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், இதன் மூலம் அனைத்து மனிதர்களின் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு அகியவைகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது. இது பழுதடைந்தால் அப்போது அந்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.
உடல் உறுப்புக்கள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது. இதனால் அந்த உறுப்புக்கள் எடுக்கப்படும் வரையில் ஆக்சிஜன் ஊட்டப்பட்ட இரத்த ஓட்டம் அந்த உறுப்புக்களுக்கு கிடைக்கிறது. இதனால் இதயம் துடித்தாலும் அந்த மனிதர் இறந்து போனவராகவே கருதப்படுகிறார்.
“மூளை என்பது நரம்பு மண்டலத்தின் தலைமையகம். சுவாசம், உணர்ச்சிகள், செயல்பாடுகள் என எல்லாமே மூளையின் கட்டுப்பாட்டில்தான் நடந்து வருகின்றன.