ஒரு நாள் இரவில், பொழுது போகாமல் ஒரு தந்தை மகளிடம் ஒரு கதை கூறு என்று கேட்டார். அந்த கண பொழுதில், சர்வசாதாரணமாக மனதில் ஸ்புரித்ததை தன் முதல் கதையாக அந்த 3 வயது மகள் சொன்னதே இந்த ‘தாயும் சேயும்’.
மாயா, நர்சரி பள்ளியில் படிக்கும் 3.5 வயது சிருமி ஆவாள். கதைகளிலும், வரைவதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவள் இவள். அவளுக்கு தினம்தோறும் வரையாமலும், தனக்கு பிடித்தமான ‘பெப்பா பிக்’ நிகழ்ச்சியை பார்க்காமலும் இருக்கவே முடியாது. நாலு வார்த்தை சேர்ந்தாற்போல பேச வரும் முன்பே பூனைகளுடன் நேரம் போவது தெரியாமல் அரட்டை அடிப்பாள் இவள்.
இவளுக்கு கையில் ஒரு பேப்பரும் பேனாவும், இவள் செல்ல பாப்பா டக் பொம்மையும் இருந்தால் போதும். வண்ண வண்ண கதைகளும் ஓவியமும் மலர துவங்கும்.