வணக்கம் நண்பர்களே..
வளையாத நாணல்கள் எங்களது ரோஜாக்கள் குழுவின் இரண்டாவது ரிலே கதை..
முதல் கதையை போலவே இக்கதைக்கும் தங்களது ஆதரவை தர வேண்டுகிறோம்.
சிறு அறிமுகம்..
கம்சனுக்கும் கிருஷ்ணனுக்குமான தொடர்பு கொண்ட இருவர். கம்சனால் தன் மனதிற்குப் பிடித்தவளை தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டு இருப்பவன்...
நேத்திரம் கொண்டு பிறர் காணும் உலகை தன் கை வண்ணம் மூலம் அழகு மிளிர காணும் ஒருத்தி..
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழும் ஒருத்தி. தன் தந்தையின் சொல் மட்டுமல்ல தந்தையே தவறானவர் என்பதைப் புரிந்து கொள்வாளா அவள்?
தன் சக உதரம் (வயிறு) அற்றவளின் வாழ்விற்காகத் தன் வாழ்வை பற்றியே சிந்திக்காத ஒருவன்..!
உயிர் காக்கும் தொழில் புரிபவன் தன் குடும்பத்திற்காக மற்றொருவன் உயிரை எடுக்கத் துணிகிறான்!
தன்னவன் தன்னை விட்டு வேறு ஒரு உறவை தேடி போன பின், இவ்வுலகத்தைக் காண பிடிக்காததாலோ என்னவோ படுத்த படுக்கையாய் ஆன ஒருவர்..
தன்னவன் தன் குடும்பத்திற்கும் பெற்ற பிள்ளைகளுக்கும் துன்பம் செய்த போதும் அவன் வாழ்வில் பங்கு கொண்டது தான் மட்டுமே என எண்ணியவள் அது பொய் எனத் தெரிய வரும் போது எடுத்த ரூபம்...
தன் முன் இருக்கும் அனைவரையும் நாணல் எனக் கருதி தாங்கள் மட்டுமே பெரிய ஆலமரம் எனக் கருதிய இருவர்...
வளைந்து கொடுக்கும் நாணல்களின் மாய பின்னல்களில் சிக்கிக் கொண்ட ஆலமரத்தின் நிலை என்னவானது?
தன் தன்மையையே மாற்றி வளையாது நிற்கும் நாணல்களின் உணர்வுகளே.. இவ் "வளையாத நாணல்கள்" லாகும்.
காதலே இல்லாத காதல் கதை....
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners