You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். (ஓசியா 4:60பி) என்று ஓசியா தீர்க்கதரிசியின் மூலமாய் ஆண்டவர் நம்மை எச்சரிக்கிறார்.
லெந்து காலம் நாம் ஆண்டவரைத் தேடி அவரோடு அதிக நேரம் செலவிடுவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற காலங்கள். மோசே கற்பலகையைப் பெற சென்ற போது ஆண்டவரோடு பர்வதத்தில் 40 நாட்கள் தனித்திருந்தார். இயேசு நாதரும் தன் பணியைத் துவங்கும் முன்பு ஆண்டவரோடு நேரம் செலவழிக்க வனாந்தரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நாமும் இந்த லெந்து காலங்களில் நம் ஆண்டவர் நமக்குத் தந்த வேதாகமத்தை முழுவதும் வாசித்து முடிக்க இந்த புத்தகம் உதவியாக இருக்கும் என விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்ட பகுதிகளை கவனமாய் வாசியுங்கள். அதற்கு தரப்படுகிற கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள். இந்த லெந்து காலத்தில் எப்படியாவது வேதத்தை ஒரு முறை வாசித்து முடிக்க வேண்டும் என்று ஜெபத்தோடு முடிவு செய்யுங்கள். இது கட்டாயத்திற்காகவோ அல்லது ஏனோ தானோவென்றோ அல்ல. எலியா 40 நாட்கள் ஓரேப் பர்வதம் மட்டும் நடந்து செல்வதற்கு தேவையான தேவ பெலத்தை பெற்றுக்கொண்டது போல நீங்களும் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரின் பாதையில் நெறி தவறாது நடப்பதற்கு பெலனடைவீர்கள். இந்த லெந்து கால முடிவில் ஒரு மிகப்பெரிய மனநிறைவை நீங்கள் பெற்றுக் கொள்ளப்போவது நிச்சயம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருள்திரு H ஜான் சாமுவேல்
அருள்திரு. H. ஜாண் சாமுவேல் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஊரைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனார் திரு. W. ஹென்றி வில்லியம்ஸ், தாயார் திருமதி. கமலாபாய் ஹென்றி அவர்கள். பள்ளி படிப்பை மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும், இளங்கலை பட்டப் படிப்பை நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியிலும், முதுகலை பட்டப்படிப்பை பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரியிலும் பயின்றார். பெங்களூரு, ஐக்கிய இறையியல் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு B.D. பட்டம் பெற்றார். இறையியல் கல்விக்குப்பின்னர் கல்வியின் மீது கொண்ட ஆர்வத்தினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.A. Philosophy & Religion-ம், திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் M.A. Christian Studies மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் M.S.W.-வும் பயின்றுள்ளார். 13 ஆண்டுகால சபை ஊழிய பணிக்கு பின்பு தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் 2015 ஆம் ஆண்டு உதவிகுரு அருட்பொழிவும், 2016 ஆம் ஆண்டு குரு அருட்பொழிவும் பெற்றார்.
கர்த்தருடைய பெரிதான கிருபையினால் தற்சமயம் பண்டாரஞ்செட்டிவிளை சேகரத்தில், சேகர தலைவராக ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.