Share this book with your friends

VIDIYEL THEADUM VIZHIGAL / விடியல் தேடும் விழிகல் சிறுகதை தொகுப்பு

Author Name: R.k..balamurugan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

விடியல் தேடும் விழிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பான என்னுடைய முதல் தொகுப்பு நீண்ட நெடுங்காலம் என் சிந்தனையில் எழுந்த கதைகளின் தொகுப்பாக உங்கள்முன் படைக்கிறேன். இந்தப் புத்தகம் கடல் சார்ந்த மீனவ குடிகளின் கண்ணீர் கலந்த பிரச்சினைகளைப் பற்றியும், வேளாண் மக்களின் வலிமிகுந்த சோகத்தை பற்றியும்,  கிராமத்திலிருந்து நகர வாழ்க்கையை நோக்கி நகர விரும்பும் ஒரு இளைஞனை பற்றியும் அதன் நிமித்தம் அவன் சந்திக்கும் பல்வேறு சிக்கல் மிகுந்த வழிகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் பேசியிருக்கிறேன். இந்தப் புத்தகமானது முழுக்க முழுக்க நலிந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கண் முன் காட்டும் ஒரு திரையை போல கதையாக வடித்து இருக்கிறேன். இந்தப் புத்தகமானது என்னுடைய தாக்கத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆகவே இருக்கிறார்கள் அவர்களுக்கு கிராமப்புறத்து மக்களைப் பற்றிய சிந்தனையோ அவர்கள் படும் இன்னல்கள் பற்றிய சிந்தனையோ துளியும் இருப்பதில்லை அதனை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த புத்தகத்தை எழுதி உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என்னை பெற்று வளர்த்த இந்த நிலைமைக்கு என்னை கொண்டுவந்த என் அம்மாவுக்கு இதனை காணிக்கையாக்குகிறேன். இந்தப் புத்தக வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளுக்காக உதவின அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த புத்தகத்தை உங்கள் முன் அளிக்கிறேன் வாருங்கள் கிராமத்தை நோக்கி பயணிக்கலாம்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

R.K.பாலமுருகன்

விடியல் தேடும் விழிகள் என்னும் இந்த புத்தகத்தை சிறுகதைத் தொகுப்பாக உங்கள்முன் படைத்து அளிக்கும் ஆர்.கே. பாலமுருகன் என்னும் நான் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த தகட்டூர் என்னும் கிராம பகுதியை சார்ந்தவன். என் இளம் வயது பள்ளிப்படிப்பை எங்கள் ஊரிலேயே அரசு பள்ளியில் தமிழ்வழியில் கற்றேன். என்னுடைய உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்பையும் அரசு பள்ளியில் தமிழ் மொழியிலேயே கற்றேன். என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு என்னுடைய கல்லூரி படிப்பிற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து கலந்தாய்வின் மூலமாக வந்தவாசி பகுதியைச் சார்ந்த திருவள்ளுவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து படித்து என்னுடைய நான்கு ஆண்டு  வானூர்திப் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது ஐ பிலிம் பேக்டரி என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு சில புத்தகங்கள்  என்னை எழுத தூண்டும் இருக்கின்றது. நான் என்னுடைய தகட்டூர் கிராமத்தில் என்னுடைய தாய் ரேவதி மற்றும் என்னுடைய சகோதரன் தங்கவேலன் மற்றும் என்னுடைய சகோதரி ஸ்நேகா ஆகியோருடன் வசித்து வருகிறேன். என் வீட்டில் நான் இரண்டாவது குழந்தை. எனக்கு இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கும் இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு உதவியாக இருந்த என்னுடைய இயக்குனர் திரு இமாலயன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகத்தை என் அம்மாவுக்கு நான் காணிக்கையாக்குகிறேன். இந்தப் புத்தகத்தின் நோக்கமானது கிராமத்து வாழ்க்கையை நகரவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கிராமத்தில் வசித்து வரும் விளிம்புநிலை மக்களுடைய வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் வகையிலும் இந்த புத்தகத்தை உங்கள் முன் படைக்கிறேன் நன்றி வணக்கம்.

Read More...

Achievements

+3 more
View All