சர்வதேச மருத்துவ மாஃபியாக்களிடம் சிக்கித் தவிக்கும் இளம் ஜோடிகளின் கதை இந்த சர்க்கரைப் பந்தலில்...
உயிரைக்காக்கவேண்டிய மருந்து உயிரைக்கொல்கிறது.
மருத்துவ ஆராய்ச்சியில் உதவும் டாக்டர் மித்ரா இதைக் கண்டுபிடித்து உயரதிகாரிகளிடமும், தன் காதலனிடமும் தெரிவிக்க... அதைத் தொடர்ந்து பெரும் பிரச்சினைகள் வெடிக்கின்றன... கொலை உட்பட..
அதே நிறுவனத்தில் வேலை செய்யும் சித்தார்த்தை ஒரு கொலை ச்சதியில் சிக்கவைத்து, அந்த மருந்து பற்றிய முழுவிவரங்களையும் திருடித்தரச் சொல்கிறது வேறு ஒரு கும்பல்... சிஎம்டியின் மகளைக் காதலித்து, நிறுவனத்தின் முதலாளயாக நினைத்திருக்கும் சித்தார்த் தன் காதல், நிறுவனம் இரண்டையும் விட்டுக்கொடுப்பானா?
இருவரும் அவரவர் சிக்கலிலிருந்து தப்புவார்களா?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners