வஞ்சிக்கப்பட்ட

வஞ்சிக்கப்பட்ட சீடன்

by முனைவர். சுவாமிதாசன் பிரான்சிஸ்

ISBN9789352060504

Type : Paperback

Have a Promotional Coupon?

In Stock.Delivered in 7-9 business days

Rs. 160+ shipping charges

In Stock.Delivered in 7-9 business days

Rs. 160+ shipping charges

Overview

Summary of the Book

உலக இரட்சகர் ஏசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத், தன் போதகரையே முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்த ஒரு இழிவான துரோகியா? சாத்தானின் சதிவலையில் சிக்கிப் பலிகடா ஆன ஒரு பரிதாபத்துக்குரிய சீடனா? அல்லது தன் போதகரின் பூலோகப் பணிவாழ்வின் முழுமைக்காக தன்னையே கையளித்த ஒரு தியாகியா? போன்ற கேள்விகளுக்கு விவிலிய அடிப்படையிலேயே விடையளிக்க முயற்சிக்கிறது இந்த நாடக நூல். அவனது மரணத்தின் பின்னணியைப் புதிராகவும், பணத்துக்கும், தன் யூதேயா பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்ததே அவனது பணிவாழ்வு பற்றிய தவறான புரிதலைக் கலிலேயாவைச் சேர்ந்த இதர சீடர்கள் மத்தியில் விதைத்தது என்பதைத் தெளிவாகவும் பதிவு செய்து, அன்றைய யூத மத தலைமைக்குரு கைப்பாஸால் கொடூரமாக வஞ்சிக்கப்பட்டு, அவனது கூலிப்படையினரால் வேட்டையாடப் பட்ட ஒரு சோக நாயகனாக யூதாஸை சித்தரித்து, அவனைத் துரோகி என்று தூற்றும் கிறிஸ்தவ மரபுக்கு சவால் விடுகிறது ‘வஞ்சிக்கப்பட்ட சீடன்’ என்ற இந்த விவிலிய நாடகம்.

About the Author

முனைவர். சுவாமிதாசன் பிரான்சிஸ் லிபியா நாட்டின் அல் மர்கஃப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், குமரிமாவட்ட நாகர்கோவிலைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர். இவரது எழுத்தில் நான்கு ஆங்கிலப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் ஒரு நாவல், இரண்டு நாடகங்கள் மற்றும் ஒரு விவிலிய ஆய்வு நூல் அடங்கும். விவிலிய பொருளுரையில் முனைவர் பட்டம் பெற்ற இவரது

எழுத்துக்கள் பெரும்பாலும் விவிலியக் கதைகளையும், கருத்துக்களையும் மையப்படுத்தியே அமைந்துள்ளன. ‘வஞ்சிக்கப்பட்ட சீடன்’ இவர் எழுதிய பன்னிரண்டாவது தமிழ் நாடகம். இருந்தாலும் புத்தகமாக வெளியாகும் இரண்டாவது நாடகம்.

Read a Sample
Write a review