Share this book with your friends

சின்ன சின்ன பூவே

Author Name: Deepa Babu | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனை காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... என் எழுத்து பயணத்தில் ஒரு மைல் கல். பல தரப்பினரின் பாராட்டுக்களையும், அபிமானத்தையும் பெற்ற கதை. ஒரு ஆன்மாவை வைத்து இப்படியும் எழுதலாமா என்று என் கற்பனையை பிறர் ரசித்த கதை. அனைவருக்கும் இப்படியொரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என வாசகர்களை ஏங்க வைத்த கதை என இப்படி சொல்லி கொண்டே போகலாம் படித்து பாருங்களேன்.
Read More...
Paperback
Paperback 550

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Deepa Babu

வணக்கம் வாசகர்களே! நான் தீபா பாபு, என்னுடைய எழுத்துப் பயணத்தை துவக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனது பெயரின் பின்னால் இருக்கும் என் கணவர் தான் எனது இந்த வெற்றி பயணத்திலும் உறுதுணையாக பின்னால் நிற்கிறார். இதுவரை பதிமூன்று நாவல்கள் இணையத்தில் எழுதி முடித்து விட்டேன், அவற்றில் நான்கு புத்தகங்களாக வெளிவந்துள்ளது. என்னுடைய எழுத்துப் பாணி, அதாவது நான் கதைகளை எழுதும் பொழுது கருத்தில் கொண்டு வடிவமைப்பது. எப்பொழுதும் என் கதைகளில் தேவையில்லாத வில்லன், வில்லி என்கிற நெகடிவ் கதாபாத்திரங்கள் இருக்காது. சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை, சூழ்நிலைகளை கொண்டே கதையின் போக்கு நகரும். இரண்டு, மூன்று அத்தியாயங்களை தாண்டும் பொழுதே இது கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல நிஜத்தில் வாழும் மனிதர்கள் என்று நீங்கள் மறக்கும் அளவிற்கு கதை உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும். அவர்களுக்காக மகிழ்வீர்கள், நகைப்பீர்கள், வருந்துவீர்கள் ஆகமொத்தம் அவர்களோடு ஒன்றாக பயணித்து ரசித்து படிப்பீர்கள். இது பல வாசகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான வார்த்தைகள். நான் எழுதும் தமிழ் நடையை வெகுவாக ரசிப்பவர்கள், உங்களது கதையை முடிக்கும் பொழுது மனதில் தோன்றும் பாசிட்டிவ் எனர்ஜியை மறுப்பதற்கில்லை என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.
Read More...

Achievements

+5 more
View All