Share this book with your friends

1998 - ORU KATHAL KATHAI / 1998 - ஒரு காதல் கதை

Author Name: Vivegananth | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வருடம் – 1998

அலங்காரம் செய்துகொண்டது 

கண்ணாடி

நீ எதிரில் நிற்கும்போது…


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, இரண்டு ரூபாய் தூரத்தில் (பேருந்துக் கட்டணம்) இருக்கும் வண்டியூரில், பெருமாள் கோவில் தெருவில் உள்ள, அந்த ஊரின் பிரத்யேகமான மைதானத்தில், ரவிசங்கர் தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனும் சிவாவும் மட்டை பிடித்துக் கொண்டிருந்தனர். ராஜா விக்கெட் கீப்பராக இருந்தான். பாண்டி ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தான். மற்றும் சிலர், ஆங்காங்கே நின்று, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அந்த மைதானத்தின் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து சில சிறுவர்களும், ஆகாயத்தில் இருந்து ஆதவனும் அவர்களின் ஆட்டத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது பந்து வீச வருபவனின் பெயர் தான் பாலா. கபில்தேவின் உலக சாதனையை (434 விக்கெட்) முறியடிப்பது தான், இவனது ஒரே இலட்சியமாம்.

பாலா, முதல் பந்தை வீசினான். ரவிசங்கர் அந்த பந்தைச் சரியாக கணித்து அடித்தான். அவர்கள் ஒரு ரன் எடுத்தனர். இப்போது, பாலாவின் பந்தை, சிவா எதிர்கொள்ள வேண்டும்.

சிவா, தனது மட்டையை இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது போல் சுழற்றினான். பிறகு, பாலாவை பந்து வீசச் சொன்னான். பாலா பந்து வீசினான். அவன் வீசிய பந்து, பாதி பிட்ச்சைக் கடப்பதற்கு முன்பாகவே, சிவா மிகவும் பிரயாசைப்பட்டு, தனது வலது காலை மடக்கி, முட்டியைத் தரையில் ஊன்றி, அசாருதீன் ஸ்டைலில், மட்டையை ஒரு சுழற்று சுழற்றினான்.

பந்து வரும் முன்பே, மட்டை விலகிச் செல்ல, பந்து அவனது தொடையைப் பதம் பார்த்தது.

Read More...
Paperback
Paperback 275

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேகானந்த்

நூலாசிரியருடைய பிற நூல்கள் 

முழு நீள நகைச்சுவை நாடகம்
காதல் தேடி

காதல் வேட்டை

காதல் நாடகம்

காதலில் ஜெயிக்கலாம் - முப்பதே நாட்களில்


நாவல்
1998 - ஒரு காதல் கதை 


கவிதைத் தொகுப்பு
காதல் எனப்படுவது… 

காணாத கனவுகள்

உன்போல் ஒரு பெண்ணை… (மரபுக் கவிதைகள்)


  ​


தங்களின் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ய...
vivegananthwriter@gmail.com

vivegananth.blogspot.com

www.amazon.com/author/vivegananth

Read More...

Achievements