Share this book with your friends

Agasthiya (kutti) kathaigal / அகஸ்திய (குட்டிக்) கதைகள் சின்னஞ் சிறு கதைகளின் ஒரு தொகுப்பு

Author Name: Melattur R Natarajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

எனக்கு குட்டிக் கதைகள் எழுத ரொம்ப பிடிக்கும். சுருங்கச் சொல்லும் பாணி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருகிறது.

ஒரு மையக்  கருவை எடுத்துக் கொண்டு, விறுவிறுவென கதையை கொண்டு போய், அலுப்புத் தட்டாமல் வார்த்தை சிக்கனத்துடன் பளிச்சென முடிக்கும் போது அதில் ஒரு நிறைவை காண்கிறேன்.

வாசகனுக்குள் குறைந்த நேரத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்க்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளை எனது பெரும்பான்மையான குட்டிக் கதைகள் வெற்றிகரமாக செய்திருக்கின்றன என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். 

இந்த அகஸ்திய குழந்தைகள், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது மாதிரி, நீளத்தில்தான் குறைவே தவிர உங்களை முழுமையாக திருப்திபடுத்தும் என்றே நினைக்கிறேன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மெலட்டூர் இரா நடராஜன்

இந்த நூலின் தொகுப்பாளர்

மெலட்டூர்.இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் தொகுப்பாளர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.

தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, பலவிதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர். இவர், சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடை நாடக/குறும்பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார்.

Read More...

Achievements

+7 more
View All