Share this book with your friends

Alexander Selkirk / அலெக்சாண்டர் செல்கிர்க்கு

Author Name: Krishna Prasad | Format: Paperback | Genre : Poetry | Other Details

அசாத்தியமான செயல்களைச் செய்யும் சாகசக்காரர்கள் இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்,  அவர்களின் செயல்களைக் கண்டு வியந்து போகின்றது வியனுலகம்.

அப்படிப்பட்ட ஒரு சாகசக்காரன் தான் அலெக்சாண்டர் செல்கிர்க்கு.  ஸ்காட்லாண்டில் லார்கோஸ் எனும் கடற்கரை குக்கிராமத்தில் பிறந்தவன், வறுமையின் காரணமாக இளம் பிராயத்திலேயே கப்பல் பயணங்களில் சென்று பொருள் சேர்த்தான். ஒருமுறை அவ்வாறு செல்லுகையில் கப்பல் தலைவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு யுவான் ஃபெர்னான்டஸ் எனும் தீவில் தனிமையில் இறக்கிவிடப்பட்டான்.  அத்தீவில் அவன் நாலு வருடங்கள் நாலு மாதங்கள் தனிமையில் வாழ்ந்துகாட்டி சாகசம் புரிந்தான்.  அவனைப் பற்றிய சுவாரசியமான கதையே இப்புத்தகம்,  ராபின்ஸன் க்ரூஸோ எனும் கற்பனைப் பாத்திரம் பிறப்பதற்கு காரணமாய் இருந்த உண்மையான நாயகன்.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கிருஷ்ணபிரசாத்

அறிவியலும் பொறியியலும் படிப்பின் பின்புலமாக தனியார் துறையில் முதுநிலை துணைத்தலைவராக பணியாற்றி வரும் கிருஷ்ணபிரசாத் தனது கல்வி அனைத்தையும் ஆங்கில வழியில்தான் செய்துள்ளார்.  தமிழையோ தமிழ்த்துறையையோ சாராத இவர் தமிழின்பால் ஆர்வமும் பற்றும் அள்ளக்குறையாத அருவியின் ஊற்றுபோல் எப்போதும் இவருள் சுரக்கின்றது.  சென்னையின் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் இவர், கலீல் ஜிப்ரனின் கவிதைகள், பட்டினத்தார் பாடல்கள் - புதுக்கவிதை வடிவில், திருக்குறள் - புதுக்கவிதை வடிவில் போன்ற புத்தகங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார்.  இவரின் தமிழுக்காற்றும் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துவமாக.

Read More...

Achievements

+3 more
View All