Share this book with your friends

Araikkul Vandha Pattamboochi / அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி

Author Name: S.Ashwin Parameshwar | Format: Hardcover | Genre : Poetry | Other Details

அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி என்ற இந்த கவிதைநூல்

வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் படிநிலைகளையும்

இயல்பாக காண்பிக்கிறது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில்

வாழ்வின் அசாதாரண தருணங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே

இந்த புத்தகம்.

Read More...
Hardcover
Hardcover 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி.அஷ்வின் பரமேஷ்வர்

சி.அஷ்வின் பரமேஷ்வர் சென்னை லயோலா கல்லூரியில்

ஆங்கிலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.

கதை, கவிதைகளின்பால் தீராத ஆர்வம் உள்ள இவர்

காகிதமழை என்ற கவிதைத்தொகுப்பை 2015இல்

வெளியிட்டுள்ளார். அறைக்குள் வந்த பட்டாம்பூச்சி கவிஞரின்

இரண்டாவது கவிதை நூல்.

 

அஷ்வின் பரமேஷ்வர் கவிதைகள், வாழ்வை, வலியை, வசந்தத்தை,

வன்மத்தை, வார்த்தைப்படுத்தி நிற்கின்றன. அவருக்கு வாழ்க்கை ஒரு

கோப்பைத் தேநீராக... நமக்கும் தான். அருந்துவோம்.

 

இனிமையும், எளிமையும், அழகும் கூடிவரப்பெற்றக் கவிதைகள். தமிழின்

நீண்ட கவிதைக் களத்தில் இக்கவிதைகளும் தம்மைப் பதியமிட்டுக்

கொள்ளும். வாழ்த்துக்கள்!

 

பேராசிரியர் முனைவர் இரா.காமராசு

துறைத்தலைவர், நாட்டுப்புறவியல் துறை

தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை

 

நிறைய போதி மரங்களை கடந்துவந்த கனத்த ஞானத்தோடு

ஒரு கவிதைப்பேழையை மரமாக வளர்த்திருக்கிற திரு.சி.அஷ்வின்

பரமேஷ்வர் கவிஞர்களால் காலந்தோறும் மதிக்கப்படுவார். வாசிப்போரின்

எண்ணத்திற்கேற்ப எளிமையான வார்த்தைகளால் தத்ரூபமான கருத்துக்களால்

வாசிப்போரை வசீகரம் செய்திருக்கிறார் இக்கவிஞர். வாழ்ந்துகாட்ட துடிக்கும்

ஒவ்வொரு தலைமுறைக்கும் இக்கவிதை பெட்டகம் ஒரு மூலிகை! படியுங்கள்

பயன்பெறுங்கள்!

 

அருட்தந்தை ஜோ.சந்தோஷ் CM.


முதல்வர், புனித வின்சென்ட் பள்ளி (ICSE), திருச்சி.

Read More...

Achievements

+3 more
View All