Share this book with your friends

Arthamulla Samprathayangal / அர்த்தமுள்ள சம்பிரதாயங்கள்

Author Name: K. Balasundhary | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

வணக்கம். உங்கள் கைகளில் தவழ்வது எனது ஏழாவது படைப்பு. நமது முன்னோர்கள் தேர்ந்த அறிவாளிகள், பல்வேறு விஞ்ஞான, மருத்துவ உண்மைகளைச் சம்பிரதாயங்கள் என்ற போர்வையில் போதித்தவர்கள். அதில் உளவியலையும் – உணர்வியலையும் கலந்து வாழ்வியலுக்குத் தேவையான நடைமுறைகளையும் சேர்த்து ஊட்டினார்கள். காலப்போக்கில் அதில் சில பிற்சேர்க்கைகள் சேர்ந்து அதனை நீர்த்துப் போகச் செய்துவிட்டன. காரணம்… மேலைநாட்டுக் கலாச்சாரம்!

இதனைப் பின்பற்றினால்தான் சமூகத்தில் அந்தஸ்து கூடும் என்ற தவறான அபிப்பிராயம். எனவே, ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என மேலைநாட்டுக் கலாச்சாரமும், நமது கலாச்சாரமும் இணைந்ததில் ‘‘கெமிஸ்ட்ரி’’ ஒர்க் அவுட் ஆகவில்லை. நமது பண்பாடுகள் வாக் அவுட் ஆகிவிட்டன! அதன் விளைவே இன்றைய பரபரப்பு! படபடப்பு!!

உதாரணமாக விளக்கேற்றி ‘‘ஆயுஷ் ஹோமம்’’ செய்து பிறந்தநாள் கொண்டாடிய நாம் மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அம்மி மிதித்து அரசாணைக்கால் நட்டு திருமணம் நடத்துவது மாறி பதிவுத் திருமணம். ஆண்டவனையே ‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கொண்டாடிய நாம், இன்று காதலர் தினம் கொண்டாடுகிறோம். அப்படிக் கொண்டாடும் நாம் அனுசரிப்பது கெளரவக்கொலை, ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு! ஏன் இந்த முரண்பாடு?”

இப்படி முரண்பட்ட வழக்கங்களை மாற்றி முறையான நெறிகளைக் கடைப்பிடிக்கத் தூண்டும் முயற்சியே இந்த நூல்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கு. பாலசுந்தரி

வயது 77, பிறந்தது புதுச்சேரி மாநில திருமலைராயன் பட்டினம், இளமையில் கல்வி எட்டாம் வகுப்பு, முதுமையில் வயது (50) முதுகலைப்பட்டம் வரலாற்றில். அதன் மூலமாக அஞ்சல் நிலைய சிறு சேமிப்பு முகவராகப் பணியாற்றினேன். 60 வயதில் "அஞ்சல் மூலம் அறிவோம் காந்தியை" பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றேன்.

அதன் பின்னரே எழுத்துலகம் வந்தேன். முதல் சிறுகதை அமுதசுரபியல், "வசுமதி ராமசாமி" அறக்கட்டளை பரிசு பெற்றது.

இருமுறை தினமலர் - பெண்கள் மலரின் சிறந்த வாசகியாகத் தேர்வு பெற்று இருக்கிறேன். "நான் அமெரிக்க மாப்பிள்ளை ஆகமாட்டேன் அப்பா" என்ற எனது மூன்றாவது நூலுக்கு சென்னை "ஒலிம்பிக்" அறக்கட்டளையின் பரிசு கிடைத்தது. அதே நூல் திருப்பூர் அரிமா சங்கத்தில் "சக்தி விருது" பெற்றுத் தந்தது.

"தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சரசு ராமசாமி" அறக்கட்டளையும், இணைந்து கோவையில் நடத்திய சிறுகதை போட்டியில் எனது சிறுகதை பிரசுரிக்க தகுந்ததாக தேர்வு செய்து ஆழம் சிறுகதை தொகுப்பில் இடம் பெற்று இருக்கிறது. 2016ம் ஆண்டில் லேடிஸ் ஸ்பெஷல் பெண்கள் இதழும் "பிபாராஜன்" அறக்கட்டளையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் எனது புதியதோர் உலகம் செய்வோம் படைப்பக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. பாரம்பரிய விருந்தும் மருந்தும் நூலுக்கு உலகத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் "The Enlightenment Award" விருது பெற்றேன். உலகலாவிய உன்னத மனிதநேய சேவை மையம் உன்னால் முடியும் பெண்ணே! கவிதை தொகுப்புக்கு "தமிழ் இலக்கிய மாமணி விருது" கொடுத்தது.

Read More...

Achievements