Share this book with your friends

Asura, Rajyam, Arambam / அசுர இராஜ்ஜியம், ஆரம்பம்

Author Name: Ramanakumar | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

ரோச்சா டிசோசா, ஒரு சிறப்பு மத்திய புலனாய்வு அதிகாரி, அதி களவில் தெரு நாய்கள் மாயமாக மறைந்து வரும் ஒரு வழக்கை விசாரித்து துப்புத்துலக்க, அது நேரே இலட்சத்தீவுகள் நோக்கி அவரை வழிநடத்துகிறது. அதற்காக, விலங்குகள் நல ஆர்வலர் கள் உட்பட புலானய்வு குழுவினருடன் இணைந்து ரோச்சா மத் திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கவரத்தி காவல் துறையின் ஒரு சிறப்பு ஆயுதமேந்திய காவல்படையை துணைக்கு அமர்த்திக்கொண்டு இலட்சத்தீவுகள் காட்டில் தேடல் வேட்டையை தொடர, இறுதியில் அவர்களது தேடல் வேட்டை ஒரு பிரமாண்ட மதில் சுவர் கொண்ட கோட்டையில் முடிவடைகிறது. அந்த கோட்டைக்குள் நுழைய முயன்ற ஆயு தப்படையினரும் ரோச்சாவும் கோட்டைக்குள் ஒரு பெரிய சாம்பிராஜியத்தையே நடத்திக்கொண்டு வரும் வில்லனிடம் சிக்கிக் கொண்டு ரோச்சா மற்றும் ஆயுதப்படை துணை தலைமை அதிகாரியை தவிர மற்றனைவரும் அந்த வில்லனின் அசுரப்படைப்பிடம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட தெரு நாய், சிக்கி உயிரிழக்கின்றனர்.  மேலும் அவ்வில்லன் வேறு யாருமல்ல அது மத்திய உள்துறை மந்திரிதான். இந்நிலையில் வில்லன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தீட்டிய சதித்திட்டத்தை நிறைவேற்ற தனது அசுரப்படையுடன் புறப்பட்டு சென்னை மெரினாக் கடற்கரையில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தை அடைகிறான். வில்லனின் கோட்டைக்குள் தனியே சிக்கிக்கொண்டு உயிருக்காக ரோச்சாவும் துணை தலைமை அதிகாரியும் தங்களால் இயன்றவரை ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க மறுபுறம் வில்லனின் அசுரப்படை மெரினா கடற்கரையில் எவ்வித அழிவை ஏற்படுத்தியது, மேலும் அந்த அசுரப்படைக்கு தோல்வி ஏற்பட்டதா என்கிற கேள்விகளுக்கு விடைகான

தவறாமல் படியுங்கள் - உங்கள் அபிமான

"அசுர இராஜ்ஜியம் ஆரம்பம்."

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

இரமணகுமார்

கவியும் பாடிடுவேன், கதையும் வடித்திடுவேன், நயமும் காட்டிடுவேன், நாலும் அறிந்திடுவேன்!

இந்த கொள்கையே என் வாழ்வின் தாரக மந்திரமாக பல ஆண்டுகள் என்னை நடத்தி வருகிறது. வாழ்க்கை என்னை எங்கு ஏவுகிறதோ நான் அங்கே போகிறேன். வாழ்க்கை என்னை எங்கு நிறுத்துகிறதோ அங்கே நான் சாதிக்கிறேன். வாழ்க்கையின் ஓட்டம் முடியாது எனது சாதனைகளும் நிற்காது. இது தான் என் வாழ்க்கை. அந்த வாழ்க்கை பயணத்தில் என் வாசகர்களாகிய உங்களுடன் நான் இன்று பயணிக்கிறேன். இதுவே என் அடையாளம் இன்று.

நாளை என்வென்பதை நான் அறியேன். ஆனால், இன்று நான் உங்களுடன், என் வாசகங்கள் உங்கள் மனதுடன்!

கடவுளின் அழகிய படைப்புகளின் மீது அறிவியல் எனும் கொடிய அரக்கன் ஏற்படுத்திய மாறா தழும்புக-ளினால் தங்கள் பொன்னான வாழ்வையும் மேன்மையும் இழந்த துயரம் நிறைந்த உள்ளங்களுக்கு இக்கதையை நான் சமர்பிக்கிறேன்.

எனது இந்த இனிய பயணித்தில் பங்குபெற்று இந்த உலகின் தனி அடையாளங்களாக வளம் வரும் அன்பு உங்களுக்கு இரமணகுமாரின் அன்பு வாழ்த்துக்கள்.

Read More...

Achievements

+2 more
View All