Share this book with your friends

Ciru Kuru Niruvanangal Cikkiram Valarvadhu Eppadi? / சிறு குறு நிறுவனங்கள் சீக்கிரம் வளர்வது எப்படி? Ciru kuru Start Ap Niruvanangalukku Eliya Aramba Nilai Vazhikatti / சிறு குறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எளிய ஆரம்ப நிலை வழிகாட்டி

Author Name: Thamizhazhagan Nallaiyan | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

சிறு குறு தொழில்முனைவர்களாக இந்தியாவின் எந்த மூலையிலும் தொழில் தொடங்க ஆசைப்படுகின்றவர்களுக்கும் மற்றும் தொழில் தொடங்கி ஏற்கனவே நடத்தி வருகின்றவர்களுக்கும் பயன்படுகின்ற வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பநிலையிலேயே சிக்கல்களை சந்திக்கும் குறு சிறு மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அடுத்து அடுத்து என்ன என்ன செய்வது என்று படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக அறிவியல் முறையில் வகைப்படுத்தி வரிசைப்படுத்தி தங்களைத் தாங்களே சோதித்து கொள்ளும்படி இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் திட்டங்கள், கடன், மானியங்கள் மற்றும் தொழிலுக்கு உதவும் அமைப்புகள் அவற்றின் இணைய முகவரிகள் என ஒரு தொழில்முனைவர் அறிந்திருக்க வேண்டிய அனைத்தையும் விட்டுவிடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More...
Paperback
Paperback 899

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழழகன் நல்லய்யன்

தமிழழகன் நல்லய்யன், தொழில் முனைவர் மற்றும் பொறியாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணுவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதொடர்பு மேலாண்மை பற்றி கற்றறிந்துள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 2005 முதல் 2012 வரை எச்.சி.எல் நிறுவனத்தில் பணியாற்றி 1200 தொழில்நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை அளித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு லெமூரியா குழுமத்தை ஆரம்பித்தார். தொலைதொடர்பு நிறுவனம், அச்சகம், சூரியஒளி மின்ஆற்றல் ஒருங்கிணைப்பு தொழில் போன்ற தொழில்களை நடத்தி வருகிறார். 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்பான சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் மற்றும் தொழில் அமைப்புகளோடு இணைந்து பணியாற்றி வருகிறார். சுமார் 20 ஆயிரம் சிறு குறு நிறுவனங்களோடு பேசி புரிந்துகொண்டு அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உதவியுள்ளார். தமிழக அரசோடு இணைந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொழில்முனைவு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து, குறைந்தது தலா ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஆறு மண்டல தொழில் மாநாடுகளை நடத்தியுள்ளார். 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பாக நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக அரசோடு இணைந்து பணியாற்றியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நீங்கலாக, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று குறு சிறு நிறுவனங்களோடு கலந்துரையாடியுள்ளார். பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சிறு குறு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துரையாடியுள்ளார். சிறு குறு நடுத்தர தொழில் கண்காட்சிகளை ஒருங்கிணைத்து, மாவட்ட, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு தொழில் கண்காட்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பல நிறுவனங்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறார். சில தொழில் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது சிறு குறு நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவே லெமூரியா பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி உதவிகளைச் செய்து வருகின்றார்.

Read More...

Achievements

+7 more
View All