Share this book with your friends

Gnathaith Thedi / ஞானத்தைத் தேடி

Author Name: Deesan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

ஞானத்தைத் தேட வைத்த தமிழ் தாய்க்கு என் முதல் வணக்கம். உலக இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்றைய அறிவியலார் விளக்கக் கூடிய அளவிலே தங்களது கருத்துக்களை முன்வைத்து இருந்தாலும் ஞானிகளின் கருத்துக்கள் ஆச்சரியமாகவே உள்ளது. இயல்பான வாழ்வினிலே சுகத்தைத் தேடும் மனிதனானவன் எவரும் இல்லாத தனிமையோடு சுகமாக வாழும் ஞானியைக் கண்டு வியந்து போகிறான். வாழத் தேவையான சூத்திரத்தை தரும் அவர்கள் வாழ ஆசை இல்லாமல் இருப்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். ஞானம் பற்றியும் ஞான வாழ்வைப் பற்றியும் அறியத் தொடங்கும் லௌகீக மனிதனுக்கு இந்நூல் நிச்சயம் உதவி செய்யும் என நான் நம்புகிறேன். ஞானவாதிகளின் தத்துவங்களை எளிதில் விளக்க மகாபாரத கதைகளை நூல் முழுதும் தேவையான இடத்தில் உதாரணமாய்க் காட்டியுள்ளேன். வரலாற்றை நேரடியாக படிப்பதை காட்டிலும் புனைவு கதைகளாய் படிக்கையில் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது. அதேபோல தத்துவங்களை வெறும் வார்த்தைகளாய் அல்லாமல் கதைகளாய் தெரிந்து கொள்ளும் போது எளிதில் புரிகிறது. நீங்களும் இவ்வுலகமும் என்றும் அமைதியாகவும் பரிபூரண நிம்மதியோடு இன்புற்று வாழ உதவி செய்வதற்கு முயல்வதே இந்நூலின் முதற்கடனாகும். அணுவளவே ஞான துளிகள் இடம்பெற்றிருக்கும் இந்நூலை இயம்புவதற்கு அறிவும் அனுபவமும் நூல் வழியே எமக்களித்த அமர நிலை எய்திய எனது ஞான குருமார்கள் அனைவருக்கும் அடக்கத்துடனே நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இச்சிறு நூலுக்கும் சிறப்பான அணிந்துரை வழங்கிய சொல்லாய்வுச் செல்வர் சே.சூரியராஜ் அவர்களுக்கும் நூல் வடிவமைப்பிற்குதவிய அண்ணன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஞானத்தை தேடி வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் நன்றிகள்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தீசன்

ஞானத்தைத் தேடி எனும் இந்த ஞான புத்தகத்தின் ஆசிரியர் தீசன். இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கும் தென்றல் இதழின் ஆசிரியர் மற்றும் நிறுவனர். ஞானத்தைத் தேடி நூலை எழுதும் போது இவரது வயது 19. கல்லூரி படிப்பை தொடரும் போதே எழுதிய இந்த புத்தகம் தென்றல் வாசகர் வட்டத்தால் பெரிதும் அடையாளப்படுத்தபட்ட புத்தகமாகும். நூலாசிரியர் இதனை ஞானத்தைத் தேடி இரண்டாம் பதிப்பின் உரையில் தென்றல் இதழின் மூலம் நூல் பெற்ற வாசகர்கள் பற்றிய குறிப்பை தந்துள்ளார். இந்த நூலில் சாதாரண மனிதன் ஞானப்படியை தொடும் போது என்னவெல்லாம் அவனுக்கு உதவியாக அமையுமோ அனைத்தையுமே நூலாசிரியர்  பத்தே பத்து அத்தியாயங்களில் அடக்கியுள்ளார். லௌகீக மனிதன் அனைத்தும் இருந்தும் இன்னல் அடைவதும் ஞானி ஒன்றுமில்லாமல் ஆனந்தமாய் வாழ்வது குறித்தும் இந்நூல் சுவைபட விளக்கியுள்ளது. அதோடு தென்றலின் மூல நோக்கமான ஜீவகாருண்யம் இந்த நூலின் மூலமே பலரை சென்றடைந்தது. தென்றல் இதழின் வாசகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய ஆன்மீக மற்றும் ஞான நேசர்கள் இந்நூலை படித்து பயனடையுமாறு தென்றல் பதிப்பகம் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகிறது.

Read More...

Achievements

+2 more
View All