Share this book with your friends

INDIAN COMMERCIAL TRANSPORT HANDBOOK (TAMIL EDITION) / இந்திய வர்த்தக போக்குவரத்து கையேடு ஐந்து நிமிட டிரான்ஸ்போர்ட்டர் (FIVE MINUTE TRANSPORTER)

Author Name: Pradeep Yadav | Format: Paperback | Genre : Technology & Engineering | Other Details

இந்திய வணிகப் போக்குவரத்து கையேடு, எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் அனால், துரதிருஷ்டவசமாக ஒழுங்கமைக்கப்படாத மற்றும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் துறையில் மூன்று தசாப்தங்களாக  நான் செய்த நீண்ட ஆராய்ச்சிகளின் சாராம்சம் ஆகும். பெரும்பாலான பங்குதாரர்கள் இந்த வர்த்தகத்தை நிர்வகிக்கும் சட்டங்களைப் பற்றிய அறியாமையில் இருப்பதால் எளிதாக சுரண்டப்படுகிறார்கள்.

விரிவான தகவல்களைச் சுருக்கமான வடிவத்தில் வழங்கி எளிதாகவும் விளக்கமாகவும் தகவல் அறிவைக் கொடுத்துள்ளேன்.

நிதி; ஒரு வணிக வாகனம் வாங்குதல்; வாங்கிய  பிறகு  தேவையான  சட்டப்பூர்வமான  ஆவணங்கள்; பல்வேறு உரிமங்கள் மற்றும் பதிவுகள்; வணிக செயல்பாட்டு செலவுகளின் அடிப்படைகளைப் பற்றிய அறிமுகம்; விபத்தினால் இழப்பு ஏற்பட்டால் அதற்கான முறைப்படி ஆவணங்கள்; மூன்றாம்தரப்பின் பொறுப்பு கோரிக்கையை  பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுதல்;  அரசாங்கத்திடமிருந்து வரும்  வாகனத்திற்கான கோரிக்கைக்கு பிறகான சூழ்நிலை; வணிக வாகனங்களை விற்கும் நேரத்தில் செய்ய வேண்டிய விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒரு வணிக வாகனத்தை விற்கும் போது பின்பற்றப்பட வேண்டிய செய்யக்கூடியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த புத்தகத்தில் உள்ள பனிரெண்டு அத்தியாயங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Read More...
Paperback
Paperback 700

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரதீப் யாதவ்

திரு. பிரதீப் யாதவ், 13 நவம்பர் 1971 அன்று திமாபூரில் (நாகாலாந்து) பிறந்து, குர்கானில் (இந்தியா) குடியேறி, போக்குவரத்து குமார் விருது மற்றும் ஒரு ரோட்டரியன் விருது பெற்றவர், 

மேலும், லாஜிஸ்டிக்ஸ் துறையில் மூன்று தசாப்தங்களாக நீண்ட அனுபவம் கொண்ட சட்ட  பட்டதாரி, வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர் மற்றும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஆவார்.

ஜப்பானின் ஏ.ஓ.டி.எஸ்.ஸில் லாஜிஸ்டிக் மேலாண்மைத் திட்டப் படிப்பு, கூடவே ஜப்பானிய பெருநிறுவன மேலாண்மைத் திட்டம்  மற்றும்  ஐஐஎம் அகமதாபாத்தில் போக்குவரத்து தொழில்முனைவர் குறித்த படிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள தகுதி வாய்ந்தவர். 

இவர் 1997 ஆம் ஆண்டு டிரான்ஸ்போர்ட் குமார் விருது பெற்றவர் ஆவார்.

90 களின் மத்தியில் கம்மின்ஸ் எஞ்சின் தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்குகள், ஏர் சஸ்பென்ஷன், ஜிபிஎஸ் ஆகியவற்றை ஏற்று முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் 2003 ம் ஆண்டு கிலௌடைச் சார்ந்த நிகழ்நிலை இ ஆர் பி யில் ஜி பி எஸை ஒருங்கிணைத்து 100% செயல்பாட்டு மேலாண்மை செயலியை தொடங்கி  அனைத்து பங்குதாரர்களுக்கும் உண்மையான மற்றும் அந்தந்த நேர தகவல்களை அளித்தார் .

Read More...

Achievements