ஒரு குழந்தையின் புன்னகை போல, அழுகையைப்போல ஒரு படைப்பாளியின் மனது திறந்து கொள்ளும் அசலான தருணம் எதுவென்று அத்தனை எளிதில் இனம் கண்டுவிட இயலாது. அஷ்வின் பரமேஷ்வரின் காகித மழைக்குள் நனைந்து திரும்பி இன்னும் கொஞ்சம் பெய்யாதா என குழந்தை கரம் நீட்டி வானம் பார்க்கிறேன்.... பாரதியின் படைப்புக்குள் ஆவேசமான மழையை பார்க்கலாம். தீம் தறிகிட என அது கொட்டுப்பறை திக்கெட்டு முழங்கும். அஷ்வின் பரமேஷ்வரின் கவிதை வெளியெங்கும் ஒரு சாரல் மழை சதா பெய்தபடியிருப்பதை குறிப்பிட்டு