Share this book with your friends

KANADHA KANAVUKAL / காணாத கனவுகள் புதுக்கவிதைகள்

Author Name: Vivegananth | Format: Paperback | Genre : Poetry | Other Details

வானம்

·        சுற்றிச்சுற்றி வந்தாலும்

வெளியேற முடியாத

பூமிப்பறவையின்

கூண்டு.

·        நட்சத்திர சித்திரங்கள்

வரையப்பட்டுள்ள

சுவர்.

·        பகலில்

வண்ணத்திலும்

இரவில்

கறுப்பு வெள்ளையிலும்

காட்சி தருகின்ற

இயற்கையின்

தொலைக்காட்சி

·        ஆயிரம் நட்சத்திரங்கள்

நடித்துள்ள படத்தைத்

தினந்தோறும்

திரையிடும்

திரையரங்கம்

·        நிலவு விவசாயி

விதைத்து வைத்த

விண்மீன் விதைகள்

காலையில் பயிர்களானதும்

சூரிய முதலாளியால்

அறுவடை செய்யப்படும்

வயல்.

·        பூமி வீட்டின்

மேற்கூரை

·        மண்

’மணம்’ புரிய

மழைத்துளிகள் என்னும்

அட்சதை அரிசிகளைத் தூவி

ஆசீர்வதிக்கின்ற

அன்புடைய நெஞ்சம்.

·        சூரியக்குடும்பம் என்னும்

கூட்டுக் குடும்பத்தினர்

கூடி வசிக்கின்ற

மாடி வீடு.

·        நிலவு ஆசிரியர்

பாடம் நடத்த

நரை விழுந்த

நட்சத்திர முதியோர்கள்

மாணவர்களாய் அமர்ந்து

பாடம் படிக்க

இரவில் நடக்கும்

முதியோர் பள்ளி

·        சூரியன் என்னும்

அமலாக்கப்பிரிவு அதிகாரியின்

அதிரடி சோதனைக்கு அஞ்சி

கணக்கில் காட்டாத- தனது

வெள்ளை நிறக்

கறுப்புப் பணத்தை (விண்மீன்கள்)

இரகசியமாய்

மறைத்து வைக்கின்ற

பணக்காரன்.

·        பகலில்

பாலைவனம்

இரவில்

சோலைவனம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேகானந்த்

விவேகானந்த்

Read More...

Achievements