Share this book with your friends

Kutram Katravan / குற்றம் கற்றவன்

Author Name: Pattukotai Prabakar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கோகுல்தாஸ் முன்னணி பில்டர். சென்னையின் அதி கோடீஸ்வரர்கள் பட்டியலில் பல வருடங்களாக நீடிப்பவர். பணத்தைத் துரத்துவதிலேயே குறியாக இருந்துவிட்டு தாமதமாகத் திருமணம் செய்தவர். மனைவி மாயா பேரழகி. கொல்லப்படுகிறாள். அதையொட்டி, பரத்-சுசிலாவைத் தேடிவருகிறார் கோகுல்தாஸ். மனைவி மாயா கொலையையொட்டி போலீஸ் தன்னை சந்தேகப்படுவதாகச் சொல்கிறார். நிஜக் குற்றவாளியை இவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார். வழக்கைக் கையில் எடுக்கும் பரத்-சுசிலா, நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் சந்திக்கிறார்கள்.

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர் இதுவரை 300-க்கும் மேற்பட்ட நாவல்களும், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரபல வார இதழ்களான ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘கல்கி’, ‘ராணி’ போன்றவற்றில் 90-க்கும் மேற்பட்ட தொடர்களை எழுதியிருக்கிறார். 

இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததோடு, அவருடைய ‘அவசர போலீஸ் 100’, ‘பவுனு பவுனுதான்’ திரைக்கதைகளில் பங்களித்திருக்கிறார். ‘சாமுராய்’, ‘பகவதி’, ‘நேபாளி’, ‘நான் அவன் இல்லை’, ‘ஜெயம்கொண்டான்’, ‘மாஞ்சா வேலு’, ‘கண்டேன் காதலை’, ‘காக்கி சட்டை’, ‘இமைக்கா நொடிகள்’, ‘காப்பான்’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் வசனகர்த்தா. 150–க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல பதிப்பகங்கள் மூலம் இவரின் புத்தகங்கள் பல பதிப்புகள் காண்கின்றன.

 

Read More...

Achievements

+5 more
View All