Share this book with your friends

Malarum Ninaivugal / மலரும் நினைவுகள் Bhagavan Sri Ramanarin mukkiya seedaraana Sri Annamalai Swamigalin Malarum Ninaivugal

Author Name: S. Sundaram | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

இளைஞன் செல்லப்பெருமாள் உண்மையை அறிந்துகொள்ள கொழுந்துவிட்டெரியும் ஆர்வத்தோடு பகவானை அணுகியபோது பகவான் உரைத்த வார்த்தைகள் இவைதான், “நான் உனக்காக காத்துக்கொண்டு இருந்தேன்: நீ எப்பொழுது வருவாய் என்று எதிர்நோக்கி இருந்தேன்.” அடுத்த 14 வருடங்கள் அண்ணாமலை சுவாமி என்று பகவானால் அழைக்கப்பட்ட செல்லப்பெருமாள் தம் குருவான பகவானுக்கு தனது உடல், மனம், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்தவாறு உண்மையுடன் சேவை செய்தார்.

அவர் வந்து சேர்ந்த முதல் நாளில் இருந்து பகவான் சீடருக்காக மிகுந்த அக்கறையுடன் தாம் வகுத்து வைத்திருந்த பாதையில் இருந்து எதுவும் அவரை திசை திருப்பாதிருக்க அவர் மேல் சீரிய கண்காணிப்பு வைத்திருந்தார். இந்த புத்தகத்தில் பகவான் தமது சீடரைப் பராமரித்ததற்கு உதாரணமாக ஏராளமான சம்பவங்கள் இருக்கின்றன: அனைத்தும் அண்ணாமலை சுவாமியின் வாய்மொழியாகவே!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகவானிடம் வந்தனர். பலர் அவருடைய சீடர்களாயினர், சிலர் அவருக்கு மிக அருகில் வசித்தும் வந்தனர். அண்ணாமலை சுவாமி தம்மை முழுவதும் பகவானின் புனிதத் திருவடிகளுக்கு அர்ப்பணித்து விட்டபடியால், அவர் பகவானிடமிருந்து அதிகப்படியான பராமரிப்பைபும், ஆதரவையும் பெறக்கூடிய பாக்கியத்தை தமது வாழ்நாள் முழுவதும் பெற்றிருந்தார். ஆகவே பகவானின் அருட்கடாக்ஷத்தால் அண்ணாமலை சுவாமி ஆன்ம விடுதலை அடைந்ததில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

Read More...
Paperback
Paperback 560

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எஸ். சுந்தரம்

ஸ்ரீ பகவான் ரமண மகரிஷியின் சீடரான ஸ்ரீ அண்ணாமலை சுவாமிகள் சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் அவரது சீடரும், 20 ஆண்டுகளாக பராமரிப்பாளருமான ஸ்ரீ எஸ்.சுந்தரம் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, டேவிட் காட்மேனால் - Living By The Words of Bhagavan என்ற புத்தகத்திற்குத் திருத்தப்பட்டது. அந்த நூலின் தமிழ் பதிப்பு இது.

Read More...

Achievements

+5 more
View All