Share this book with your friends

MARAIYAVIRUNTHA MANIKKA KARKAL - PART II / மறையவிருந்த மாணிக்கக் கற்கள் -இரண்டாம் பாகம்

Author Name: Prof. Rev. D. A. Christadoss B. A. , L. T. , B. D. , M. Th | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்சபை தோன்றி சுமார் இரண்டு நூற்றாண்டுகளாகின்றன. இயேசு பெருமாபெருகிக்கொண்டு வருகின்றது. கடவுளுக்கு ஸ்தோத்திரம். திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை அறியவேண்டும் என்ற அவாவும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டு வரு கிறது. இந்நிலையில், "யார் நமது காரியமாய்ப் போவான்’’, என்ற கேள்விக்கு, "இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்’’, என்று ஏசாயா தீர்க்கன் முன்வந்தது போல், திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை எழுத முன்வந்திருப்பவர், மறை திரு. D. A. கிறிஸ்துதாஸ். அவர் ஒரு திருநெல்வேலி வாசி, திருநெல்வேலி மாவட்டத்திலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, குருத்துவ பணிவிடைக்கு அபிஷேகம் பெற்று, இங்குள்ள வேத சாஸ்திரக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி, தற்பொழுது செராம்பூர் பல்கலைக்கழகத்தில் திருச்சபைப் பேராசிரியராகத் தொண்டாற்றுபவர். திருச்சபை சரித்திரத்தைக் கற்பதிலும், கற்பிப்பதிலும் பேரவா கொண்டவர். திருநெல்வேலி திருச்சபை சரித்திரத்தை எழுதுவதற்குரிய அறிவும், ஆற்றலும். அனுபவமும் படைத்தவர். அவர் இயற்றியுள்ள இந்நூலுக்காக நான் முதற்கண் இறைவனைப் போற்றுகின்றேன். பின்பு நெல்லைத் திருமண்டலக் கிறிஸ்தவர்கள் சார்பாக என் நன்றியை நூலாசிரியருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன். மணலுக்குள் புதைந்து கிடக்கும் மாணிக்கக் கற்களைப் பொறுக்கி எடுத்து அணிகலமாகச் செய்தாற்போல், ஆங்காங்கு சிதறியும், மறைந்தும் கிடந்த சரித்திரங்களைக் கண்டெடுத்து, சிறந்ததொரு ஆபரணமாகச் செய்து கொடுத்திருப்பவர் மறைதிரு கிறிஸ்துதாஸ். அவரால் இயற்றப்பட்டுள்ள இந்நூலே அச்சிறந்த அணிகலமாகும். இதனைப் பலர் பெற்று இதன் மூலமாகப் பயனடைவார்களென்பது எனது நம்பிக்கை. 

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பேரசிரியர் அருள்திரு தே அ கிறிஸ்துதாஸ்

எழுத்தாளர் பற்றி..
பேராசிரியர் ரெவ் டி.ஏ. கிறிஸ்துதாஸ் ஐயர் (19121990) தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்தார். பள்ளி ஆசிரியர், இறையியல் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அமைச்சர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் பிரகாசித்தவர். திருச்சபையின் வரலாற்றையும் அதன் வெற்றிக்குக் காரணமான தெய்வீக மனிதர்களையும் பற்றிய நமது புரிதலுக்கு அவருடைய எழுத்துக்கள் திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான, வட்டாரத் தமிழில் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நூல்களை எழுதுவது இவரது கொடை. அவர் தனது ஊழியத்தின் மூலம் பல புத்தகங்களை மட்டுமல்ல, பல கிறிஸ்தவ தலைவர்களையும் உருவாக்கியுள்ளார்.
பேராசிரியர் ரெவ் டி.ஏ. கிறிஸ்துதாஸ் ஐயர் ஐயர் திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையில் முத்திரை பதித்த மாபெரும் தெய்வீக மனிதர்கள் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்கள் அவற்றைப் பற்றி நமக்குத் தெரியப்படுத்துகின்றன, மேலும் திருச்சபைக்கு நாமும் என்ன செய்ய முடியும் என்பதை சவால் விடுகின்றன. "மறையவிருந்த மாணிக்கக் கார்கள்-இரண்டாம் பாகம்" என்ற இந்நூலில், மணலில் புதைந்து கிடக்கும் நகைகளை எடுத்து நகையாக்கியது போல், சிதறி மறைந்து மறைந்திருக்கும் கதைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சிறந்த ஆபரணமாக்கியுள்ளார். இவர் இயற்றிய இந்நூல் சிறந்த துணை. பலர் அதைப் பெற்று பயனடைய வேண்டும் என்பதே கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் நோக்கமாகும். - இந்நூல் இக்காலத்துக்கும் பொருத்தமானது, நமக்குச் சவாலாக உள்ளது.

Read More...

Achievements

+7 more
View All