Share this book with your friends

MOOLAVAR / மூலவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் | PASUMPON MUTHURAMALINGA THEVAR

Author Name: THIRUMURUGANKALILINGAM | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த மண்ணுக்கு துளியும் சம்மந்தமற்ற சம்பந்தங்கள் இம்மண்ணில் வேர்விட்டு நிற்பதால் என்னவோ, 'ஒருவர் என்ன எழுத வேண்டும்' என்பதும், 'அவர் எழுத்தை வைத்து இன்னவராகத்தான் இருக்க வேண்டும்' என்பதும் இன்னொருவரால் இங்கு தீர்மானிக்கப்படுகிறது. 

1957; முதுகுளத்தூர் கலவரத்தின் நீட்சியாக பல குடும்பங்கள் பல்வேறு காலகட்டங்களில் சாதிய மோதலை சகிக்க முடியாமல் ஊரை விட்டு வெளியேறியபடி இருந்தது. அப்படி வெளியேறிய குடும்பங்களில் எங்கள் குடும்பமும் அடங்கும்.

"அப்படியென்றால், நீங்கள் அந்த குறிப்பிட்ட சமூகங்களை வசைபாடிதானே எழுதியிருக்க வேண்டும்" என்று தாம் மனதுக்குள் பேசுவது என் செவிகளுக்கு கேட்கிறது. நான், நெருப்பு வைத்தவனை விட்டுவிட்டு நெருப்பை வசைபாடும் அளவிற்கு அடிமுட்டாள் இல்லை. 

தமிழகம் போல் ஈழமும் ஒரு காலத்தில் சாதியப் பேதங்களுக்கு ஆட்பட்ட தேசமே. ஆனால், அங்கு எப்படி தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுதலை வேண்டி துவக்கு ஏந்தினார்கள்? ஏனெனில், 'இனவுணர்வு' எனும் நெருப்பை தூக்கிப் பிடித்த தலைவனிடம் தன்னை சமர்ப்பணம் செய்ததால் அது சாத்தியமானது. 

'மூலவர்' என்ற படைப்பு தமிழ்ப் புலமையின் கண்ணாடி; அதை வைக்கிறேன் உங்களின் முன்னாடி!

Read More...
Paperback
Paperback 400

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமுருகன்காளிலிங்கம்

இவரின் அகவையை மனதில் கொண்டு நீங்கள் இவரின் படைப்புகளை படித்தால் அது உங்களுக்கு புதுமையாக தோன்றும். அதேநேரம், இவரின் படைப்புகளை மனதில் கொண்டு இவரின் அகவையை நீங்கள் கணக்கிட்டால் அது பழமையாக தோன்றும்.

இவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு படைப்புகளையும் தமிழ்த்தேசியம் 'தனது' என்று உரிமை கொண்டாடுகிறது. ஆதலால்தான், இந்த தமிழ்மண் இவரை 'தனது' என்று உரிமை கொண்டாடுகிறது. 

தாம் பிறந்த மண்ணையும், இத்தமிழ் பேரினத்தையும் சுவாசித்து நிற்பவர். மண், மக்கள், புரட்சி என இம்மூன்றையும் தம் மதி வழி ஏற்றி விரல் வழி கொடுப்பதில் வல்லவர்.

தமிழ்த்தேசியத்தின் குரல்வளை நசுக்கப்படும் போதெல்லாம் அங்கே இவரின் எழுத்துகள் வந்து சுவாசம் தரும் என்பதில் துளியும் ஐயமில்லை. 

இதோ, தமிழ்த்தேசியத்தின் ஒப்பற்ற பாவலரின் ஓர் ஒப்பற்ற படைப்பு. இதற்கு முன்னால் இது போன்ற படைப்புகள் வந்ததுமில்லை; இனி, வரப்போவதில்லை! 

Read More...

Achievements

+11 more
View All