Share this book with your friends

Mudhal Mazhaitthuli / முதல் மழைத்துளி

Author Name: Lakshmi Ganesan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தமிழ் இலக்கியம் எத்தனையோ பரிமாணத்தை காலத்திற்கு ஏற்ப அடைந்து தலைமுறைக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து இளமையாக்கி கொண்டது.

தமிழை இளமையாக்கி என்றும் பார்த்த பெருமை அந்தந்த காலகட்டத்தில்  எழுதி வாழ்ந்து மறைந்த வாழும் புலவர்களையும் ஆசிரியர்களையுமே சேரும்.

இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் தோழமை எழுத்தாளர்  லெட்சுமி கணேசனின் இந்த கன்னி முயற்சியாக அவரது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் நிச்சயமாக இலக்கிய உலகில் ஒரு மணிமகுடம் சூட்டும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தன்னுடன் சம காலத்தில் எழுதும் எல்லோரையும் அரவணைத்து போகும் அவர்களது தலைமை பண்பும், பாராட்டி நிறை குறைகளை மனம் நோகாமல் வார்த்தைகளில் வெளிப்படுத்தும் மாண்பும் எல்லோருக்கும் பிடித்த ஒன்று.

எனக்கும் இப்படித்தான் அவர்களது நட்பு எழுத்தின் மூலம் கிட்டியது. இது தமிழ் எனக்கு கொடுத்த கௌரவ பரிசாகவே பார்க்கிறேன். கல்லை செதுக்கும் போது உளி தன்னையும் சேர்த்து கூர் தீட்டிக் கொள்வது போல் .. இவர் தன்னுடைய சிறுகதை நூல் வெளியீட்டில் என்னையும் முன்னுரை எழுதச் சொல்லி எனக்கும் எழுத்தாளர் எனும் முகவரியை வழங்கி விட்டார்.

தோழமை எழுத்தாளர் லெட்சுமி கணேசன் அவர்களை பற்றி சொல்லவேண்டும் என்றால் பதிப்பகம் அதையும் தனி நூலாக அச்சிட வேண்டி வரும். முகம் பார்க்காத தோழர். தமிழ் எங்களை எழுத்துலகில் இணைத்து கொள்ள இங்கே நான் முன்னுரை எழுதுகிறேன்.

பதினைந்து சிறுகதைகள் வழியாக காதலும் கருணையையும் கலந்து புதுக்கவிதையில் சிறுகதை புனைந்து என்றும் தன்னை புரட்சிகரமான புதுமை எழுத்தாளர் என்று நிலை  நிறுத்திக் கொண்டார்.
நாமும் வாசிக்க முனைந்து விட்டால் நிச்சயமாக ஒவ்வொரு சிறுகதையும் நம்மை சில காலத்திற்கு அதன் பாதிப்பில் வைத்திருக்கும் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை.

தோழர் இன்னும் பல சாதனை நூல்களை படைத்து இலக்கிய வானில் தனக்கென்று ஒரு நிரந்தர அங்கிகாரம் பெற்று எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தி இறைவனிடம் வேண்டுகிறேன்.

என்றென்றும் அன்புடன்..
ஆ. பொன்னி வர்மன்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

லெஷ்சுமி கணேசன்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலையில் பிறந்த நான், சிறுவயதிலிருந்தே வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன். நான் தமிழ் வழியில் பயின்று, திருச்சியில் பள்ளி படிப்பையும் தஞ்சாவூரில் பொறியியல் மேற்படிப்பை முடித்திருந்தாலும், நான் வாசிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. ஏதாவது மனதை நெகிழ வைத்துவிட்டாலோ இல்லை நேரம் கிடைத்தாலோ எனது உணர்ச்சிகளை மென்மையாக கொட்டிவிடுவேன். 

முதலில் பிரதிலிப்பி என்ற இணைய தளத்தில் கவிதைகள், கதைகள் மற்றும் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். Lakshmi Ganesan என்ற பெயரில் என்னை அங்கேயும் தேடலாம்.
பிரதிலிப்பி தளமும் என்னை அடையாளம் கண்டு பல சிறுகதை போட்டிகளில் எனது படைப்பிற்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் தந்துள்ளது. இன்னும் தொடர்ந்து மகிழ்வுடன் எழுதுகிறேன். 

என்னை தனித்து காட்டியது எழுத்துக்கள் என்றாலும் எனது வாசகர்களின் விமர்சனங்கள் என்னை ஊக்கமளித்து, புத்தகம் வெளியிடும் அளவிற்கு உயர்த்தியது என்பதை அன்புடனும் பெருமையுடன் கூறுகிறேன். இதில குடும்பத்தினரின் உறுதுணையும் உறுதியாய் நிற்க வைத்துள்ளது.

எனது எழுத்து நிரம்பிய காகிதத்தை உங்களால் தூக்கியெறிய கூட மனம் வராது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
எனது படைப்புகள் அத்தனையும் மனதை கணமாக்கும் இல்லை மருந்தாக வந்து வலியை தீர்க்கும்.

முதல் மழைத்துளி கார்முகிலாய் வருகிறாள்,
உங்கள் கருத்துக்களை lakshmieganesan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்க காத்திருக்கிறேன்.

என்றும் அன்புடன் லெஷ்சுமி கணேசன் 

Read More...

Achievements

+2 more
View All