Notion Press
Sign in to enhance your reading experience
You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryமுரட்டுக் குதிரைக்கு 37 கடிவாளங்கள்: பிராணாயாமப் பயிற்சிக் கையேடு என்ற இந்த நூல் Mind Your Breathing: The Yogi’s Handbook with 37 Pranayama Exercises என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். விருது பெற்ற அந்த நூலின் ஆசிரியர் சுந்தர் பாலசுப்ரமணியனே இதனை மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்தில் புகழ்பெற்ற பல பிராணாயாம முறைகளும், அவற்றினைப் பொருத்தமாக மாற்றியமைத்த முறைகளும், சித்தர்களின் வழிமுறையில் முற்றிலும் புதியதுமான முறைகளும் இடம்பெற்றிருக்கின்றன. பல நூற்றாண்டுகள் தொன்மையான மரபின் அறிவுச் சாரத்தையும், அவற்றைத் தற்கால அறிவியலின் வாயிலாக நிறுவும் ஆராய்ச்சிகளையும் படம்பிடித்துள்ள இந்நூல் உங்கள் யோகப் பயிற்சி செய்யும் நண்பருக்குச் சிறந்த பரிசாக இருக்கும்!
இந்நூலைப் பற்றிய விமர்சனங்கள்
சுந்தர் பாலசுப்ரமணியன் தொன்மையான யோகப் பயிற்சிகள் நம்மை ஓய்வாக இருக்க வைக்கும் என்பதையும் தாண்டி அவை செல் (அணுக்)களின் அளவில் மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் காட்டியுள்ளார்.
- டிஸ்கவர் இதழ்
யோகாவின் நோய் தீர்க்கும் பதினெட்டு அடிப்படையான கண்டுபிடிப்புகளில் தலையாயது
- யோகா ஜர்னல்
டாக்டர் சுந்தர் பிராணாயாமத்தில் ஒரு உலகத் தரம் வாய்ந்த முன்னோடி. இந்தத் தலைசிறந்த படைப்பில் பிராணாயாம முறைகளைத் தெளிவாகவும், பயனுள்ள வகையிலும் கற்றுத் தருகிறார்.
- தாமஸ் டோசியர் ஜூனியர்
இதுவொரு தனிச்சிறப்பான புத்தகம். பிராணாயாமத்துக்கு எவ்வளவோ நூல்கள் வந்திருந்தாலும் இது ஒரு உயிரியல் ஆராய்ச்சியாளரால் ஆராயப்பட்ட முறைகளையும் பழங்கால சித்தர் மரபு வந்த முறைகளையும் கூறுவது.
- அமேசான் வாடிக்கையாளர்
இந்தப் புத்தகம் பிராணாயாமங்களைப் பற்றிய தெளிவான பார்வையைத் தருகிறது. விளக்கங்கள் நன்றாக உள்ளன.
- பெச்செட்டி ஹரிஷ்
சுந்தர் பாலசுப்ரமணியன், PhD, C-IAYT
டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் தற்போது அமெரிக்காவிலுள்ள தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கதிரியக்கப் புற்றுநோயியலில் புகைப்பழக்கத்தால் புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படும் விளைவுகளை ஆராய்ந்து வருகிறார், கூடவே இவர் ஒரு யோகவியல் ஆராய்ச்சியாளருமாவார். இவர் முதன்முதலாக பிராணாயாமத்தின் மூலம் உமிழ்நீரில் ஏற்படும் புரத மாறுபாடுகளைக் கண்டறிந்ததோடு பிராணாயாம முறைகளை மருத்துவம் மற்றும் சமூக நோக்கங்களில் பயன்படுத்தி வருகிறார். இவர் உயிர் வேதியியலில் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றவராக இருந்தபோதிலும் தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்றுதலே இவர் யோக ஆராய்ச்சியில் புதுமைகளைப் புரியக் காரணமாக இருக்கிறது. இவர் PranaScience: Decoding Yoga Breathing என்ற நூலையும் Chanting IS Pranayama உட்படப் பல்வேறு இசைப்பேழைகளையும் வெளியிட்டுள்ளார். சுந்தர் தமிழ்நாட்டிலுள்ள கரம்பக்குடி என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற TEDxCharleston 2015 என்ற நிகழ்வில் இவர் ஆற்றிய உரை பிராணாயாமம் குறித்த உரைகளிலேயே புகழ் மிக்கதும், ஏழு லட்சத்திற்கும் அதிகமான பேரால் பார்வையிடப்பட்டதும் ஆகும். இவர் உலகின் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து பயிற்சிப் பட்டறைகளை நடத்திப் பிற ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு யோக முறைகளின் மூலம் ஒருங்கிணைந்த சுகாதாரத்தைப் பற்றிக் கற்றுத் தருகிறார். யோக ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நிகழ்த்தும் வகையில் திருமூலர் தமிழ் இருக்கையை உருவாக்குவதில் முனைந்துள்ளார். இவர் தென் கரோலினாவிலுள்ள மவுண்ட் பிளசண்ட் என்ற நகரில் தனது மனைவி ஜானகி மற்றும் குழந்தைகள் மாசிலன், நெல்லி, வெற்றி ஆகியோரோடு வசித்துவருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.