Share this book with your friends

New forms of Islamic Tamil Literature / தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்

Author Name: Manavai Mustafa | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய இஸ்லாமியச் சிற்றிலக்கியக் கருத்தரங்குக்கு நான் தலைமைவகித்த போது, 'தமிழில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய இலக்கிய வடிவங்களைப் பற்றி ஆய்வு அடிப்படையில் ஆதார நூல்கள் எழுதப்பட வேண்டும் என்றும் இக்குறையை நிறைவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் இன்றியமையாத் தேவை' எனவும் குறிப்பிட்டேன். அதே கூட்டத்தில் என் வேண்டுகோளுக்குப் பதில் அளிக்கும் வகையில் அந் நிறுவன இயக்குநர் டாக்டர் ச.வே.சு. அவர்கள் இஸ்லாமிய இலக்கியப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வரும் நீங்களே ஏன் அந்தப் பணியை மேற்கொண்டு செம்மையாகச் செய்து முடிக்கக் கூடாது?’ என வினாவடிவில் வேண்டுகோள் விடுத்தார்.இவ்வேண்டு கோள் ஒரு வகையில் எனக்குப் புதுவேகத்தை ஊட்டவே செய்தது. அன்று முதல் என்னை இப்பணியில் ஈடுபடுத்த முனைந்தேன். 

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மணவை முஸ்தபா

மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்

Read More...

Achievements

+15 more
View All