Share this book with your friends

Oru Kirekka Kadhal / ஒரு கிரேக்க காதல் Novel

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சங்க காலமோ தற்காலமோ காதல் என்ற உணர்ச்சி இவ்வுலகம் அழிந்தாலும் அழியப் போவதில்லை.  காதல் கல்லாதவர்களைக் கூட கவிஞர்களாக்குமாம்.  கோழையைக் கூட தளபதியாக்குமாம். உண்மைதான் போல. சினேகம் என்பது யாருக்குத்தான் இருக்காது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மானுடப் பிறவிகள் வரை தவிர்க்க இயலா ஒன்றுதான். இருப்பினும் எக்காலத்திலும் காதல் அமைவதெல்லாம் விதிவிட்ட வழிதான்.  சிலருக்கு ஆயுள் வரை தொடரும் காதல் சிலருக்கு காலாண்டு மட்டுமே நிலைக்கும். காதலர்கள் பிரிந்தாலும் காதல் அழியுமா என்ன? இந்நாவலில் போர்க்களத்தில் காதலைப் புகுத்தியுள்ளேன். இந்நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் என் கற்பனைக்கு உட்பட்டவையே. ஒரு பேரரசின்  வீரம், நிர்வாகத் திறன், போர் யுக்தி, எதிர் நாட்டினரின் வஞ்சம், பகை, பெண்ணியம், சகோதர பாசம், துரோகம், தேசப்  பற்று, காதல் மற்றும் கடமை என பல கோணங்களில்  பயணிக்கிறது இக்கதை.  இக்கதை கட்டாயம் தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

வணக்கம். எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் எழுத்துக்களின் வாயிலாக எனக்கு நானே ஒரு அடையாளத்தை கொடுத்துக்கொண்டேன். தங்களால் ஏற்றுக்கொள்ள இயலாவிடினும் என் கற்பனையில் என்னளவில் நான் ஒரு எழுத்தாளர் தான். ஏனோ எழுத்தின் மீது எனக்கொரு மோகம். காதலின் மீதும் தான். ஆனால் காதலன் தான் கிடைக்கவில்லை. அதை  விடுங்கள். கடவுள் மனது வைத்தால் தான்  காதல் அமையும். கணவன் கிடைப்பது பெரிதல்ல ஆனால் அவன் சிறந்த காதலனாக இருப்பதே கடவுள் கருணைதான். நீண்ட நாட்களுக்குப் பின் எழுத வேண்டுமென ஒரு ஆவல். என்னுடைய கடைசி நாவல் காதலர் தினத்தன்று வெளியானது. அதன்பின் ஏனோ எழுதுவதற்கு ஒரு சோம்பறை. இப்பொழுதுதான் தெளிந்தது. ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் என்னுடன் இந்நூலில் ஒரு வாசகராக கலந்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்நாவல் தங்களைத் திருப்திபடுத்தும்.  தொடர்ந்து நான் எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் அன்பான  நன்றிகள். 

Read More...

Achievements