Share this book with your friends

PALIPITATTIN PANIVITAIKKARARKAL / பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள்

Author Name: Rev. J. Gnanadurai Rajarathinam B.th. B.d, | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள் தேவனுடைய சமூகத்தில் ஆராதனை செய்யவும், தேவனுடைய ஜனங்களை ஆசீர்வதிக்கவும் தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்கள்.

தேவனுடைய ஆலயமாகிய தங்கள் சரீரங்களை ஜீவபலியாக பலிபீடத்தில் படைத்த அவர்கள் ஒவ்வொருவரையும் தேவனுடைய ஆலயமாகமாற்ற ஊழியம் செய்தனர்.

தங்களையல்ல தங்களுடைய மந்தைகளை உண்மையாய் புல்லுள்ள இடங்களில் மேய்த்து தங்கள் வாழ்க்கையையே தத்தம் செய்தனர்.

ஸ்தோத்திர பலியையும், ஜெபதூபவர்க்கத்தையும் தேவனுக்கு முன்பாக எப்போதும் ஏறெடுத்தவர்கள்இப்பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள். 

இவர்கள் ஊழியத்தின் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். நம் மத்தியில் ஊழியம் செய்த சில ஊழியர்களின் வரலாற்றை இந்நூலில் எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்நூலை மிகச்சிறந்த முறையில் அச்சிட உதவிய நெல்லை பேராய அச்சகத்தாருக்கு நன்றி சொல்கிறேன்.

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அருள்திரு. J.ஞானதுரை ராஜரத்தினம்

அருள்திரு. J. ஞானதுரை ராஜரத்தினம் அவர்கள் திரு.D.ஜெபராஜ், திருமதி .J. கமலம் பொன்னுத்தாய் தம்பதியருக்கு 1953 ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சுமார் 32 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நெல்லை - திருமண்டலத்தில் குருவானவராக பணி செய்து ஓய்வுபெற்று இன்றும் திருப்பணிவிடையாற்றி வருகின்றார்கள். இவருடைய மனைவி திருமதி பியாட்றஸ் ஞானதுரை B.Lit., M.A., B.D., படித்தவர். டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகள் தமிழ் ஆசிரியை கையாகப் பணியாற்றியவர். 2018 ஆம் ஆண்டு அவருடைய 65 வது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். திருச்சபை வரலாற்றுப் பணிகளிலும், திருச்சபை மக்களுக்கு தேவையான ஆவிக்குரிய நூல்கள், ஊழியர்களுக்கு தேவையான பிரசங்க நூல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும்படி வரலாற்றுப் புத்தகங்களையும் இவர்களுடைய திருப்பணியின் பயனாக ஒன்பதாவது நூலை எழுதி இருக்கின்றார். அதில் குறிப்பாக உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் என்ற நூல் ஒருங்கிணைந்த நெல்லை திருமண்டல ஆதிகால திருச்சபை வரலாற்று தடையங்களை நமக்கு சிறப்பாக கொடுத்துள்ளார்கள். இக்கால இளம் திருச்சபை மக்களுக்கு இவர்களுடைய நூல்கள் ஒரு திறவுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

குருவானவர் எழுதியுள்ள இந்த “பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள்” நூலுக்காக  பராபரனுக்கு நன்றி செலுத்துகின்றேன். நம் பகுதியில் பணிசெய்த சில மிஷனெரிகள் மற்றும் ஊழியர்களின் வரலாற்றை ஆசிரியர் மிக சிறப்பாக தொகுத்து நமக்கு தந்துள்ளார்கள். இந்நூலை வடிவமைத்து வெளியிட வரலாற்றுச் சங்கத்திற்கு உரிமை வழங்கிய நூலாசிரியருக்கு அவர்களுக்கு கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

Read More...

Achievements

+7 more
View All