Share this book with your friends

Pandiya Perarasargal / பாண்டிய பேரரசர்கள் Sangakalam Muthal 966 C.E Mudiya

Author Name: Munaivar Gururajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

முதலாம் தமிழ் சங்க காலம் முதல் 10ம் நூற்றாண்டு பிற்பகுதி முடிய மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் வரலாற்று சம்பவங்களை தொகுத்து நூலாசிரியர் புத்தகமாக வழங்கியுள்ளார். மதுரை தோன்றிய விதத்தையும் , பாண்டிய மன்னர்கள் வீரத்தையும் , மக்கள் நலப் பணியையும் , கட்டிடக் கலை [ எல்லோரா மற்றும் குடவரை கோவில்] நுணுக்கங்களையும், சமயம் சார்ந்த அதிசய நிகழ்வுகளையும் இந்த நூல் விளக்குகிறது.

 

அந்த காலக் கட்டத்தில் நிகழ்ந்த சளுக்கியர் படையெடுப்புக்களை எவ்வாறு மாறவர்மன் அரிகேசரி மற்றும் அவன் மைந்தன் கோச்சடையன் தோற்கடித்தார்கள் என்பதை பற்றி இந்த நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது, பல்லவர் --பாண்டியர் இடையே நிகழ்ந்த அரசியல் மோதல்களும் அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

சேர ,சோழ, பாண்டியர்களை தவிர புதுப் புது அரசுகள் எவ்வாறு தோன்றின ? என்றும் விளக்கப்பட்டுள்ளது.

 

பல்லவர்களின் வீழ்ச்சியையும் , பிற்கால சோழைர்களின் எழுச்சியையும் இந்த புத்தகம் நன்கு விளக்குகிறது

 

இந்த புத்தகம் 10ம் நூற்றாண்டு முடிய தமிழ் நாட்டில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வாசகர்கள் எளிதாக அறிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

Read More...
Paperback
Paperback 625

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் குருராஜன்

மதுரையில் பிறந்து வளர்ந்த ஆசிரியர் குருராஜன் மதுரை வேளாண்மை கல்லூரியில் இளநிலை வேளாண்மை மற்றும் முதுநிலை வேளாண்மை பட்டம் பெற்றார். பின்பு கோவை தமிழ் நாடு வேளாண்மை ப் பல்கலைகழகத்தில் உழவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அதே பல்கலைகழகத்தில் உழவியல் துறையில் 38 வருடங்கள் உழவியல் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தார். உழவியல் சார்ந்த மூன்று புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். 50க்கும் மேற்பட்ட வேளாண்மை ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதியுள்ளார்.

 

சிறு வயது முதல் சரித்திரத்தில் அதிக ஈடுபாடு மற்றும் ஆர்வம் கொண்டிருந்த ஆசிரியர் பணி ஒய்வுக்கு பிறகு பாண்டியர்களின் சரித்திரத்தை பற்றிய க் குறிப்புக்களையும், கல்வெட்டு மற்றும் செப்பேடு குறிப்புக்களையும் ஒருங்கிணைத்து இந்த நூலை வெளியிட்டுள்ளார்

Read More...

Achievements

+5 more
View All