Share this book with your friends

POI POIYAYTHTHAVIRA VERONDRUMILLAI - OREY ORU NAAL / பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள் இரண்டு நாவல்கள்/2 Novels

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இரண்டு ட்ராக் கதை.

ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?

இன்னொரு பக்கம்...

உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா?

சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைகள், பொய்யாகும். எப்படி?

உள்ளே...உங்களுக்காக

விறுவிறுவென பறக்கும் பக்கங்களுடன் 

பொய்...

பொய்யைத் தவிர வேறோன்றுமில்லை!

..........................................

பணம், பதவி, அதிகாரம் உள்ள ஒருவனுக்கு கேட்டதெல்லாம் வசப்படுகிறது. 

ஒரே ஒரு நாள்...ஒன்றை

கேட்கிறான்.

அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்க்கையை மட்டுமின்றி, மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது.

அவன் கேட்டது என்ன...?

யாருடைய வாழ்க்கைகள் எல்லாம் மாறின..?

உள்ளே காத்திருக்கின்றன பரப்பரப்பான அத்தியாயங்கள்.

 

Read More...
Paperback
Paperback 220

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All