You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇன்னும் நமது மனம் உள்வாங்கிக் கொள்ளாத சென்ற நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறையில், உடலை ஊடுறுவி அதன் உறுப்புக்களை கண்ணாடியில் பார்ப்பதுபோல் பார்க்க வைக்கும் ‘ஸ்கேனிங்’ என்ற முறையும், உடனடியாகப் படம் பிடித்து, உடனடியாக படம் பிடித்தவரிடமே அவரது உருவத்தையும் பேச்சையும் திரையில் காட்டும் வீடியோ முறைமையும் , இன்டர்நெட் இணையமும் சமூக முறைமையையே தலைகீழாகப் புரட்டி விட்டது என்று சொல்லலாம். இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகள் சமூகத்தில் மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தாமல் அடியோடு மனோவேகத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன.
இப்படிப்பட்ட இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளில், வீடியோ - சமூகத்தில் நல்லதும் கெட்டதுமான பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, இன்றையக் கிராமங்களில் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கும் படைப்புதான் ‘என்னுரை - சாமியாடிகள்’ என்ற இந்த புதினம் என்றாலும் இதில் வீடியோ - ஆடியோ தாக்கம் இலைமறைவு காய்மறைவாகக் காட்டப்பட்டு, இதன் விளைவுகளால் ஏற்பட்ட கதையம்சமே இந்தப் புதினத்தில் மேலோங்கி நிற்கிறது.
சு. சமுத்திரம்
சு. சமுத்திரம் (Su. Samuthiram, 1941 – ஏப்ரல் 1, 2003) ஒரு தமிழ் எழுத்தாளர். வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்
The items in your Cart will be deleted, click ok to proceed.