Share this book with your friends

Sarva Sakthi Vazhipaadu - Siriyavar Mudhal Periyavar Varai Anaivarukkum! / சர்வ சக்தி வழிபாடு - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும்!  தெய்வீக சுலோகங்கள்  இதமான வார்த்தைகள்  உயர்ந்த எண்ணங்கள்  உயர்ந்த சிந்தனைகள்  தெளிவான தெய்வீக புத்தி  பயம் அற்ற, சர்வ சக்தி மனம்  ஆத்ம அமைதி  தெய்வ தரிசனம்  உயர்ந்த கர்ம பலன்கள்  வேண்டியது

Author Name: Aishwarya Maharishi | Format: Paperback | Genre : Others | Other Details

‘மனம் போல் வாழ்வு’ – உண்மைதான். ஆனால், அந்த மனதை யார் சீர் செய்வது? பணம் இருப்போர் மனமருத்துவரிடம், அறிவு இருப்போர் ஞானிகளிடம் செல்லலாம். சரி, அவற்றை நம் மனம் ஏற்றுவிடுமா என்ன? ஆனால் புண்ணியம் இருப்போருக்கு இந்த நூல் ஒன்றே போதும், நம் மனம் கட்டாயம் ஏற்கும். இறைவனை அறிய வைத்து, பார்க்க வைத்து, மனதை லயிக்க வைக்கும் தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. இந்த நூல் இறைவனிடம் நம்மை அழைத்துச் சென்றுவிட்டு, ‘அனுப்பிய இறைவனைப் பிடித்திடு மனமே’ என்று முடிக்கும் போது, உணர்வுகள் சிலிர்க்கின்றன. ‘சுலபமான இந்த ஒற்றைத் தீர்வு இருக்கும் போது ஆயிரம் தீர்வுகளுக்காக ஏன் சுற்றித் திரிந்தாய் மூடனே’ என நம்மைப் பார்த்து நகைக்கிறது. எத்தனையோ துயரங்களும் வலிகளும் காணாமல் போகின்றன. வேண்டியவைகளுக்கான வாய்ப்புகள் தானே அமைகின்றன. இறை அருளைக் கிடைக்க வைத்து, அனுபவிக்க வைக்கிறது. யாருக்கு வாழ்க்கையில் எது லக்ஷியமோ இருந்தாலும் சரி, சிரமங்கள் என்னவோ, தேவையான சாதனங்களும் தீர்வுகளும் என்னவோ, இந்த ஒரு நூல் அனைவருக்கும் உதவும் முக்கியமான சாவி. ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எதையும் விட சிறந்தது என்று சொன்னது இந்த நூல் எழுத்துக்கு நிச்சயமாகப் பொருந்தும். இந்தப் புத்தம் சிறியதுதான். ஆனால் அது சரியான மாத்திரை. மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க நம்மை இறைபலசாலியாக அதிர்ஷ்டசாலியாக ஆக்கிவிடுகிறது. நாஸ்திகர் மேற்கத்தய விஞ்ஞானிகளின் கருத்துக்களில்  உள்ள  குறைகளை  ‘கேள்வி-பதில்’ பகுதியில் எடுத்துக் காட்டி, அவர்களால் நமக்குள் ஏற்பட்டு உள்ள ஆழ் மன  பாதிப்புகளை நீக்குகிறது. சில பக்கங்களிலேயே சிறந்த அறிவுத் தெளிவை ஏற்படுத்துகிறது. இந்த ஒரு நூல் நம் வாழ்வில் பல ஆயிரம் நன்மைகளை செய்துவிடும் என்றால் அது ஒரு சிறிய பாராட்டுதான்.

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஐஶ்வர்ய மஹறிஷி

நூலாசிரியர் ஐஶ்வர்ய மஹறிஷி  (1971) அவர்கள் தம் சிறுவயது முதலாகவே ஆன்மீகத் தேடலில் வாழ்வை முழுமையாக அற்பணித்து வாழ்பவர். ஆஸ்திகர், நாஸ்திகர் இருவரிடமும் இருக்கும் மூடப் பழக்கங்களை விடவைத்து சரியான அறிவின் வழியில் அழைத்துச் செல்பவர். வேதபூர்வம் வேத-அந்தம் இரண்டின் ஞானத்திலுமே நிபுணத்துவம் பெற்றவர். இரண்டுக்கும் இக் காலத்திற்கு ஏற்ற விசேஷ பாடத் திட்டங்களை வடிவமைத்து இரண்டையுமே பொது மக்களுக்குச் சொல்லித் தரும் மிக அறிதான சில நபர்களில் அவர் ஒருவர் உலகில். அவரது உபதேஷங்களால் ஆனந்த வாழ்க்கை நடத்துவோர் பல ஆயிரம், நின்றுபோன விவாகரத்துக்களும் தற்கொலைகளும் பல ஆயிரம். ‘வயதான காலத்தில்தான் ஆன்மீகத்தின் ஞானத்தின் தேவை’ என்ற சிந்தனையை மாற்றி, ‘இளமைக்கு ‘வேத-பூர்வம்; அவ்வாறே முதுமைக்கு வேத-அந்தம்’ என்பவர். இரு நிலைகளுக்கும் இரு போதனைகளையும் தந்து, அவற்றின் மூலம் வெற்றி, சுகம், பாதுகாப்புப் பலன்களைக் கொடுத்து நிரூபிப்பவர். உலகில் இவர் அதிசய ஞானிதான். சரியாகக் கற்றால் இல்லறமே இளமையில் பொருத்தம் ஆன்மீக சாதனை என்று பாராட்டுபவர். இல்லறத்தார்களுக்கு நல்வழி காட்டவே தம் வாழ்வை அற்பணித்தவர். அதில் வெற்றிகண்டவர். வழிபாடு பரிகாரங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அவர் சொல்லித் தரும்போது அவர் சிறந்த புற-விஞ்ஞானி என்பதை அறிய முடிகிறது. பிரம்ம ஞானத்தை அவர் சொல்லித் தரும்போது அவர் சிறந்த அக-விஞ்ஞானி என்பதை அறிய முடிகிறது. அவர் தரும் பயிற்சி முறைகள் மிக மிகச் சுலபமானவை, ஆனால், பலன்களை அதிகமாகவே அள்ளித் அள்ளித் தருபவை. 

Read More...

Achievements

+3 more
View All