Share this book with your friends

SAWYERPURAM THIRUCHCHABAI SARITHTHIRAM Part-01 / சாயர்புரம் திருச்சபை சரித்திரம் பாகம் -01

Author Name: Prof. Rev. D. A. Christadoss B. A. , L. T. , B. D. , M. Th. | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

ஒருங்கிணைந்த திருநெல்வேலி திருச்சபை உருவாகி சுமார் இரண்டரை நூற்றாண்டுகளாகின்றன. பராபரனின் பெரிதான கிருபையினால் இன்று திருமண்டலங்களாகவும், பல நூறு திருச்சபைகளாகவும் பெருகிவந்து கொண்டு இருக்கின்றது. பராபரனுக்கு ஸ்தோத்திரம். திருச்சபை சரித்திரத்தை அறிய வேண்டிய அவாவும் மக்கள் மனதில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் ‘யார் நமது காரியமாய் போவான்,’ இதோ அடியேன் இருந்கின்றேன், என்னை அனுப்பும்” என்று ஏசாயா தீர்க்கன் முன் வந்தது போல திருநெல்வேலி வரலாற்றை மீள் பதிப்பு செய்யவும், வரலாற்று பணிகளை கள ஆய்வுப் மேற்கொள்ளவும், நின்றுபோன வரலாற்று “தொடரோட்டத்தை தொடரவும்” கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட இயக்கமே ‘திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்’ 

திருநெல்வேலி சரித்திரத்தை தொடர வேண்டுமால், சரித்திரத்தை எழுதுவதற்குரிய அறிவும், ஆற்றலும், அனுபவமும் உடையவர். சரித்திரத்தை கற்பதிலும், கற்ப்பிப்பதிலும் திருநெல்வேலி சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ.கிறிஸ்துதாஸ் அவர்களின் பணி பிரதானமானது. அவர் தனது 78 வது வயதில் 1990 ஆம் ஆண்டு மரித்துவிட்ட போதிலும், அவருடைய படைப்புகளை குடும்பத்தில் உறுப்பினர்கள் பாதுகாத்து வந்ததும், ஐயருடைய படைப்புகளை தக்க தருணத்தில் வரலாற்றுச் சங்கத்திற்கு அனைத்து நூல்களையும் மறுபதிப்புக்கு அனுமதியளித்தும் ஐயருடைய மறந்து கிடந்த கையெழுத்துப் பிரதிகளை வெளிக்கொண்டு வரவும், மொழிபெயர்ப்பு பணிகளுக்கும் பராபரன் உதவிசெய்தார்.

மறைந்து கிடந்த சரித்திரங்களை கண்டெடுத்து சிறந்ததொரு ஆபரணமாக கொடுத்திருக்கின்றார் பேராசிரியர் அவருடைய படைப்புகளில் இது மிகச்சிறந்த நநூலாக இருக்கும் என்பது நம்பிக்கை. 

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பேராசிரியர் அருள்திரு தே அ கிறிஸ்துதாஸ்

பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் (1912- 1990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பிறந்து, பாளையங்கோட்டையில் வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார்.

'சாயர்புரம் திருச்சபை சரித்திரம்' எனும் இந்நூல் மறைந்து கிடந்த சரித்திரங்களை கண்டெடுத்து சிறந்ததொரு ஆபரணமாக கொடுத்திருக்கின்றார் பேராசிரியர். அவருடைய படைப்புகளில் இது மிகச்சிறந்த நூலாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பராபரன் இந்நூலை இயற்றியவரையும், வெளியிட உதவியவர்களையும், இதனைப் படிப்பவர்களையும் ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் திருநெல்வேலி

Read More...

Achievements

+7 more
View All