Share this book with your friends

Shadpadee Stotram / ஷட்பதீ ஸ்தோத்ரம் Adi Shankarar Aruliya Vishnu Stuti

Author Name: Koushik K | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

இந்த ஸ்தோத்திரம் அத்வைத சித்தாந்த பிரதிஷ்டாபகாசாரியராகிய ஸ்ரீ ஆதி  சங்கர பகவத்பாதரால் இறைவனான ஸ்ரீமன்நாராயணனை துதித்துப்  பாடப்பட்டது. 

இந்த ஸ்தோத்திரம் ஷட்பதீ ஸ்தோத்ரம் என்று வழங்கப் படுகிறது. அதற்க்கான காரணம் இது ஆறு பதங்களால் (ஸ்லோகங்களால் ஆனது) இந்த துதி இறைவனிடம் பக்தி ஞான வைராக்யங்களையும் முக்தியையும் பிரார்த்திக்கிறது. 

ஷட்பதீ என்ற சொல்லுக்கு ஆறு பதங்களைக் கொண்ட ஒரு இலக்கியம் என்று பொருள். ஷட்பதி என்பதற்கு ஆறு கால்களை உடையது அதாவது தேனைப்பருகும் வண்டு என்று பொருள். 

இந்த துதியின் சந்தமானது மணமிகு மலரைச் சுற்றி பரவசத்துடன் அசைந்து ஆடும் வண்டின் நடையை ஒத்து இருப்பதாலும் இது ஷட்பதி ஸ்தோத்ரம் எனப்படுகிறது.

இந்தத் துதி கவிதைமயமானதும் இலக்கணத்திற்குற்பட்ட பல அணி அலங்காரங்களைக் கொண்டதும் ஆகும். இத்துதியில் ஒரே சொல் வேறு பொருட்படுமாறு வெவ்வேறிடங்களிள் பயன்படுத்தப்பட்டுள்ளது அதே போல் ஒத்த ஒலியை உடைய சொற்களும் இசைக்கும் சந்ததிற்கும் அழகுசேர்க்குமாறு கையாளப் பட்டுள்ளது.

ஆசார்ய பகவத்பாதர் தன் மனதை வண்டாகவும் இறைவன் திருவடியை மலராகவும் உவமை வைத்துப் பாடுகிறார். 

ஸ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரத்திற்கு பதவுரையும் விரிவுரையும் எளிய மொழியில் எழுத முற்படுகிறேன்.

இதற்கு ஆதி நாராயணர் அருள் செய்யப் பிரார்த்தித்துக்கொண்டு தொடங்குகிறேன். 

இந்த ஸ்தோத்திரத்தில் இடம்பெற்ற நாராயணரின் திருநாமங்களுக்கு ஸ்ரீ ஆதி சங்கரருடைய விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யத்தின் படி வியாக்யானம் செய்யப்படுகிறது

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கௌஷிக் கே

எனக்குக் கணினி சார்ந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் உண்டு. சமஸ்க்ருதம் பயின்றுள்ளேன். ஆன்மிகம் சார்ந்த சாஸ்திரங்களைப் படித்து அது சம்பந்தமான உரைகளையும் விளக்கங்களையும் இங்கு உங்கள் அனைவரோடும் பகிர்ந்து மகிழ ஆசை

Read More...

Achievements

+1 more
View All