Share this book with your friends

Thadayam / தடயம்

Author Name: N.Amirudeen Hasani | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அமிருதீனின் பார்வையில் அம்பின் கூர்மை உள்ளது. அதனால் தான் அவர் சொல்லும் கதைச் சம்பவங்கள் மீன்களைப் போல துள்ளிச் செல்கின்றன. வழியில் இடைப்படும் துன்பங்களைத் தள்ளியும் தாண்டியும் செல்லும் வண்ணம் வசீகரமான பாத்திரங்கள் நம்மைச் சந்திக்கின்றனர்.

           அமிருதீனின் புனைவு மொழியினூடாக வாழ்வின் பன்முகங்களும் புனைவின்றி தரிசனமாகின்றன. மேலைநாட்டு கதை சொல்லும் மரபுடன் புதுமை கலந்து, கண்களாலும் காதுகளாலும் கவனித்து உள்வாங்கிய உணர்வுகளை மனத்தடக்கிக் கருவாக்கி, ஒன்பது கதைகளைப் பிரசவித்திருக்கிறார்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நி.அமிருதீன் ஹசனி

இலைகளின் மௌனம் கவிதைகளாய் ..  என்னும் கவிதை நூலின் வாயிலாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் நி.அமிருதீன் ஹசனி  அவர்கள். தடயம் இவருடைய மூன்றாவது நூலாகும்.

இவர் எழுதிய செல்வி என்ற நர்ஸக்கா சிறுகதை பரவலாக மின் இதழ்களின் கவனம் பெற்ற கதையாகும். 2019 ஆம் ஆண்டு புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்திய தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியில் இச்சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. 2023 ஜுன் மாதம் காரைக்குடி கலைமாமணி, டாக்டர் அய்க்கண் அவர்களின் நினைவு சிறுகதைப் போட்டியில் இவரின் செவ்வந்தி சிறுகதை முதல் பரிசினைப் பெற்றது. 

தற்போது திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திரு நி.அமிருதீன் அவர்கள் கல்விப் புலம் சார்ந்த பங்களிப்புகள் பலவற்றிற்கும் உரியவர். சர்வதேச ஆய்விதழ்களில் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. 

Read More...

Achievements

+2 more
View All