Share this book with your friends

Thayumanavalae! / தாயுமானவளே!

Author Name: Sailakshmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

 
 
கதையை பற்றி வாசகர் ஒருவர் தெரிவித்தது!!!
“தாயுமானவளே!!!” சாய்லஷ்மியின் கதையைப் படித்து விட்டு, ஒரு இரண்டு நாட்களாகத் தொடர் சிந்தனையில் இருந்தேன். எப்படி அவங்களுக்கு இப்படி எழுத தோன்றியது என??? நினைத்துக் கொண்டேன்.

காதல், புரிதல், பாசம், குடும்ப அமைப்பு, குழந்தைகளை வழி நடத்தும் பாங்கு, எழுத்து நடையும், தொய்வு இல்லாமல் செல்லும் கதை பாங்கும் மிக அருமை, வித்தியாசமான முயற்சி! கதை முழுவதும் ஹீரோவே எடுத்துச் சொல்லுவது போல கதையை நகர்ந்த்தி செல்கிறார்.

உதய்-அனு மறுமணம் குடும்ப பின்னணியில், அனுவின் அணுகுமுறை இதையெல்லாம் தாண்டிக் கட்டிலறையோடு முடிவதல்ல பந்தம், உறவு, காதல், காமம், இவையெல்லாம் என முகத்தில் அறைந்த போல, மகனிடம் சொல்லும் தந்தை என தூள் கிளப்புகிறார்

எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு வைக்கும் உறவுகள் வாழ்வை எப்படி செம்மைப்படுத்தும் என அருமையான ஒரு கதை! ஆர்ப்பாட்டம் இல்லாமல் தெளிந்த நீரோடை போல நம்மைக் கதைக்கேட்க வைக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்துக்களில்... மனதை சமன் செய்ய, படபடப்பு இல்லாமல் படிக்க ஒரு புதினம் தேவைப்படுவோருக்கு நிச்சயம் பெருவிருந்து மிஸ் பண்ணாமல் படித்து விடுங்கள் மக்களே! நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக.
நன்றி!!! சாய்லஷ்மி
இப்படிக்கு,
குணசுந்தரி வேலுசாமி.

கதையை பற்றிய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி!
சாய்லஷ்மி. 

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சாய்லஷ்மி

என் பெயர் E.P. தனலெட்சுமி. சாய்லஷ்மி என்கிற பெயரில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பள்ளி பருவத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.  கல்லூரி பருவத்தில் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். தற்போது வரை எழுதி கொண்டிருக்கிறேன்.

நன்றி.

Read More...

Achievements