Notion Press
Sign in to enhance your reading experience
You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Sign in to enhance your reading experience
Sign in to continue reading.
Join India's Largest Community of Writers & Readers
An Excellent and Dedicated Team with an established presence in the publishing industry.
Vivek SreedharAuthor of Ketchup & Curryகாதலைப் பற்றி நாம் எழுதுவதெல்லாம் காற்றை சிறைப்படுத்துவதற்கு ஒப்பாகும். கடவுளை அறிய முடியாது உணரத்தான் முடியும் என்பது போல. காதல் ஒரு உணர்வு. பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது அந்த அழகை நாம் ரசிக்கலாம் ஆனால் அதை அடைய முயற்சிக்கக் கூடாது. இயற்கை தான் பெண்ணாக, மலராக, நதியாக, கடலாக உருவெடுத்து நம் முன் வேடிக்கை காட்டுகிறது. பிரிவின் போது கசியும் கண்ணீர்த்துளிகள் தான் காதலை புனிதப்படுத்துகிறது. காதல் நமக்கு சிறகை தருகிறது வானை அளக்க ஆனாலும் பலபேர் தாழத்தான் பறக்கிறோம். விடியல் உறக்கமற்றதாக விடிகிறது, உன்மத்தமாக இருப்பதால் பசி மறக்கிறது. இப்படி உன்னையே அசைத்துப் பார்க்கும் காதலைப் பற்றி நீங்கள அறிந்து கொள்ள வேண்டாமா. அதற்கு நீங்கள் காதலித்துப் பாருங்கள். அன்பின் மகத்துவத்தில் நீங்கள் ஆட்கொள்ளப் படுவீர்கள்.
தோற்றவர்களின் காதல் வரலாறு ஆகிறது. காதலின் சின்னமாக கல்லறையே இருக்கிறது. நிராகரிக்கப்பட்டவனின் ஆன்மா இந்தப் பூமியையே சுற்றிச் சுற்றி வருகிறது. அவளது பார்வைக்கு எத்தனை மகத்துவம் என்பது கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்பவனுக்குத் தான் தெரியும். இப்பூமியில் புனிதம் கெடாத ஒன்று உண்டென்றால் அது காதல் தான். மனித வாழ்வில் உன்னதமான தருணம் காதல் வயப்படுவதே. காதலின் மகத்துவத்தை வர்ணிக்க அகராதியில் வார்த்தைகளே கிடையாது. காதல் நதியில் மூழ்கியவர்கள் நிச்சயமாக கரை சேருவார்கள். இத்தொகுதி பாதிக்குமேல் காதலைப் பற்றியே பாடுகிறது. படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
ப.மதியழகன்
ப.மதியழகன்(28.3.1980) (பிறந்த ஊர் மன்னார்குடி)
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன். நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர். தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.லிட் முடித்துள்ளார் கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், பதாகை, மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை, இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. சிவஒளி ஆன்மிக இதழில் அறுபத்து மூவர் பெரியபுராண தொடர் எழுதி வருகிறார்
முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது. இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. ஐந்தாவது கவிதை தொகுப்பாக சாத்தானின் வேதம் 2019 ஜூலை மாதம் வெளிவந்தது, ஆறாவதாக நந்தி எனும் 25 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 2019 செப்டம்பர் மாதம் வெளிவந்தது 2020ல் மைஇருட்டு என்ற கவிதை தொகுதி வெளிவந்திருக்கிறது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.
தற்போது மன்னார்குடியில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக வேலை செய்து வருகிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.