Share this book with your friends

ULAKARATCAKARIN ULIYAKKARAR / உலகரட்சகரின் ஊழியக்காரர்

Author Name: Rev. J. Gnanadurai Rajarathinam B.th. B.d, | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

“பிதாவானவர் குமாரனை உலக ரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்” ⅼ யோவான் 4:14 என்று அப்போஸ்தலனாகிய யோவான் சாட்சியிடுகிறார்.

               தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து உலக ரட்சகர். அவருடைய ஊழியக்காரராயிருப்பது எவ்வளவு ஆசீர்வாதம். உலக ரட்சகர் தம்முடைய ஊழியக்காரர் மூலமாய் உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்க, ஆசீர்வதிக்கச் சித்தம் கொண்டார்.

               இந்தியாவிலும், உலக அளவிலும் தேவனால் பயன்படுத்தப்பட்ட சில ஊழியக்காரரின் ஊழியத்தை இந்நூலில் சுருக்கமாகச் சிந்திக்க இருக்கின்றோம். இவைகள் நம்முடைய பூர்வ காலத்தை நினைக்க உதவி செய்யும். 

               தேவனுடைய பிள்ளைகளாய் ஆசீர்வாதத்தை அனுபவிக்கும் நாம் நம்முடைய கடமையை உணர்ந்து செயல்படத் தேவன் நம்மை அழைக்கிறார். அழைக்கப்பட்ட நாம் அபாத்திரராய் போகாதபடி தேவன் நம்மேல் கிருபையாய் இருப்பாராக.

               இன்றைக்கு ஆண்டவர் தேடுகின்ற ஊழியக்காரர் “ஆண்டவரே, நான் என்ன செய்ய நீர் சித்தமாயிருக்கிறீர்” என்று கேட்பவர்களைத் தான் தங்களுக்கென்று வாழாததேவனுக்கென்று வாழும் ஊழியரையே ஆண்டவர் பயன்படுத்த விரும்புகின்றார்.

               சாதாரண மக்கள் தங்களை ஆண்டவருடைய கைகளில் அர்ப்பணித்த பொழுது தேவன் அவர்களை வல்லமையாய்ப் பயன்படுத்தினார். நாமும் அர்ப்பணிப்போம். உலக ரட்சகர் நம்மையும் பயன்படுத்துவார்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அருள்திரு. J. ஞானதுரை ராஜரத்தினம்

ஆசிரியரைப் பற்றி..

அருள்திரு.J.ஞானதுரை

ராஜரத்தினம் அவர்கள் திரு.D.ஜெபராஜ்.

திருமதி.J. கமலம் பொன்னுத்தாய் தம்பதியருக்கு 1953 ம்

ஆண்டு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். சுமார் 32 ஆண்டுகள் பாரம்பரியமிக்க திருமண்டலத்தில்

நெல்லை

குருவானவராக பணி செய்து ஓய்வுபெற்று இன்றும் திருப்பணிவிடையாற்றி

வருகின்றார்கள். இவருடைய மனைவி திருமதி பியாட்றஸ் ஞானதுரை B.Lit., M.A., B.D., படித்தவர். டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப் பள்ளியில் எட்டு

ஆண்டுகள் தமிழ் ஆசிரியைகையாகப் பணியாற்றியவர். 2018 ஆம் ஆண்டு அவருடைய 65 வது வயதில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். திருச்சபை வரலாற்றுப் பணிகளிலும், திருச்சபை மக்களுக்கு தேவையான ஆவிக்குரிய நூல்கள். ஊழியர்களுக்கு தேவையான பிரசங்க நூல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும்படி வரலாற்றுப் புத்தகங்களையும் இவர்களுடைய திருப்பணியின் பயனாக ஒன்பதாவது நூலை எழுதி இருக்கின்றார். அதில் குறிப்பாக உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் என்ற நூல் ஒருங்கிணைந்த நெல்லை திருமண்டல ஆதிகால திருச்சபை வரலாற்று தடையங்களை நமக்கு சிறப்பாக கொடுத்துள்ளார்கள். இக்கால இளம் திருச்சபை மக்களுக்கு இவர்களுடைய நூல்கள் ஒரு திறவுகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அந்த வரிசையில் அவர் இயற்றியுள்ள "உலக ரட்சகரின் ஊழியக்காரர்" நூலுக்காக நான் முதற்கண் பராபரனைப் போற்றுகின்றோம். பிரசித்திபெற்ற சில ஊழியர்களை இந்நூல் சுமந்து வருகின்றது. திருச்சபை மக்களுக்கு பேராசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நூலை வடிவமைத்து வெளியிட வரலாற்றுச் சங்கத்திற்கு உரிமை வழங்கிய நூலாசிரியருக்கு அவர்களுக்கு கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்

Read More...

Achievements

+7 more
View All