Share this book with your friends

Vada Tamilnatu Irular Vaazhviyalum Avargal Marabusar Arivum / வட தமிழ்நாட்டு இருளர் வாழ்வியலும் அவர்களின் மரபுசார் அறிவும

Author Name: Manjula Chinnadurai | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

பழங்குடி சமூகங்கள் அவர்களின் சிறந்துபட்ட வாழ்க்கை முறை, வட்டார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடனான இணக்கமான உறவால் அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால் இந்த வளமான அறிவும் இயற்கைசார் திறன்களும் உலகமயமாக்கப்பட்ட, அதிகரித்து வரும் ஒருமைபடுத்தப்பட்ட உலகில் மிக விரைவாக அழிந்து வருகின்றன.

 தமிழகத்தின் அடையாளப் பழங்குடியாக வாழும் இருளர்கள் அவர்களுடைய பாம்பு மற்றும் எலி பிடிதிறன்களுக்காக வட மாவட்டங்களில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்களின் மரபுவழி அறிவுக்கு மற்றொரு பக்கம் உள்ளது. இது வட்டார சூழல் மண்டலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் உயிரிமூலங்களின் நீள்நிலைப் பயன்பாட்டின் மூலம் வாழும் வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதல் ஆகும்.

மூலிகைகளின் மூலம் நோய்களை முழுமையாக குணப்படுத்துவது பற்றிய அவர்களின் மரபுவழி அறிவையும் நோய்கள், விஷக்கடி, உணவு மற்றும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய புரிதலையும் இப்புத்தகம் விரிவாக விவரிக்கிறது.  அனுபவ மற்றும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் அவர்களின் பண்பாடு பற்றிய சில விவரங்களையும் இப்புத்தகம் வழங்குகிறது.

நவீன முன்னேற்றத்தால் கொண்டுவரப்பட்ட தவிர்க்க முடியாத மாற்றங்களை ஏற்பது மற்றும் அவர்களின் உயிரி-பண்பாட்டு பாரம்பரிய இழப்பு ஆகியன பல பழங்குடி சமூகங்களை இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளன. இத்தகைய அறிவார்ந்த பழங்குடி சமூகத்தினர் இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையை மதிப்பதோடு மட்டுமில்லாமல் அவ்வாழ்வின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளலும் போற்றுதலும் முக்கியமானதாகும்.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மஞ்சுளா சின்னதுரை

இப்புத்தகத்தின் ஆசிரியர் சி.மஞ்சுளா அரசு சாரா அமைப்பில் (என்.ஜி.ஓ.) உயிரிப்பல்வகைமை பாதுகாப்பு, மரபுவழி அறிவு, வாழ்வாதாரம் மற்றும் பால் குறித்த துறைகளில் பணியாற்றி வருகிறார். சூழலியலில் முதுகலைப் பட்டம் பெற்றபின், இருளர் பழங்குடி சமூகத்தின் சிகிச்சைக்கான மரபுவழி அறிவு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 

அவர் பணி செய்த காலத்தில், வட்டார தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய இருளர்களின் வளமான அறிவையும் அவர்களிடம் அதிகரித்து வரும் மரபுவழி அறிவு இழப்பையும் புரிந்துகொண்டு, முனைவர் பட்டப் படிப்பின் மூலம் அவர்களின் மருத்துவ முறையை ஆழமாக ஆராய நூலாசிரியர் முடிவு செய்தார்.

இருளரின் சூழல் மற்றும் மருத்துவ அறிவை பிற மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடனும் மிக முக்கியமாக, இருளர் இளைஞர்களை பெரும்பான்மை சமூக முன்னேற்றத்தின் பகுதியாக இருப்பதற்காகவும் தம் வளமான உயிரி-பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் ஆய்வேடு தமிழில் புத்தகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Read More...

Achievements

+1 more
View All